News January 3, 2026
திருவாரூர்: கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை!

திருவாரூர் மாவட்ட கூட்டுறவுத்துறை சார்பில் 137 கூட்டுறவு வங்கிகளில் 1,300 டன் யூரியா உரம், 439 டன் டி.ஏ.பி. மற்றும் 647 டன் காம்ப்ளக்ஸ் உரமும் கையிருப்பில் உள்ளது. மேலும் தனியார் கடைகளில் கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்வது தெரியவந்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களில் உரங்களைப் பெற்று விவசாயப் பணிகளை மேற்கொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
Similar News
News January 3, 2026
திருவாரூரில் உள்ள காசிக்கு நிகரான கோயில்

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அடுத்த ஸ்ரீவாஞ்சியத்தில் ஶ்ரீவாஞ்சிநாத சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் ராகுவும், கேதுவும் ஒரு உடல் கொண்டு காட்சியளிக்கின்றனர். மேலும் இங்கு எமதர்மனுக்கு தனி சன்னதி உள்ளது. எமதர்மனுக்கு பாவ விமோசனம் வழங்கிய இந்த கோயிலில் சிவபெருமானை தன் தோளில் சுமந்து எமதர்மன் தீர்த்தவாரி நடைபெறுகிறது. இக்கோயில் காசிக்கு நிகரான தலமாக கூறப்படுகிறது. தெரியாதவங்களுக்கு SHARE பண்ணுங்க.
News January 3, 2026
திருவாரூர்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

திருவாரூர் மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <
News January 3, 2026
பொங்கல் தொகுப்பு கரும்புகளை பார்வையிட்ட ஆட்சியர்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம் சேருமங்கலம் ஊராட்சி அத்திக்கோட்டை கிராமம் மற்றும் நெம்மேலி ஊராட்சி மேல நெம்மேலி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பொங்கல் பரிசு தொகுக்கு வழங்க 3 லட்சத்து 95 ஆயிரத்து 453 கொள்முதல் செய்யப்பட்ட பன்னீர் கரும்புகளை மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


