News December 21, 2025
திருவாரூர்: கிரைண்டர் வாங்க காசு வேணுமா?

தமிழக அரசு சார்பில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் பெண்கள், கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களை முன்னேற்றும் வகையில் கிரைண்டர் வாங்க மானியம் வழங்கப்படுகிறது. இதன் மூலம் மொத்த விலையில் 50% அல்லது அதிகபட்சமாக ரூ.5,000 மானியமாக வழங்கப்படும். இதற்கு 25 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, வருமானச் சான்று ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம். SHARE
Similar News
News December 25, 2025
திருவாரூர்: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோர்களுக்கான சிறப்புக் குறைதீர்க்கும் கூட்டம், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கத்தில், வருகின்ற 29.12.2025 பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் தங்களது குறைகளை மனுக்கள் மூலம் அளித்திடலாம், அனைவரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
News December 25, 2025
திருவாரூர்: 49 பேருக்கு ரூ.1½ லட்சம் உதவி!

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா நடந்தது. இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன், நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு 49 பேருக்கு ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்து 825 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
News December 25, 2025
திருவாரூர்: ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் (டிச.24) இரவு 10 மணி முதல், காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஷேர் செய்யுங்கள்!


