News December 15, 2025
திருவாரூர்: கார் மோதி விவசாயி பலி

திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி அருகே ஊர்குடியைச் சேர்ந்தவர் கோட்டைச்சாமி (55). விவசாயியான இவர், நேற்று தனது ஸ்கூட்டரில் திருவாரூர்-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஊர்குடி பிரிவு சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த கார் எதிர்பாராதவிதமாக ஸ்கூட்டர் மீது மோதியுள்ளது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த கோட்டைசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
Similar News
News December 20, 2025
திருவாரூர்: செவிலியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

திருவாரூர் மருத்துவக் கல்லூரி வளாகத்தில், இன்று (20.12.2025) பிற்பகல் பணி நிரந்தரம் கோரி உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் செவிலியர்களுக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் ஆதரவு தெரிவித்து, மாநில ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் இலராபாரதிச் செல்வன் உரையாற்றினார். நிகழ்வில் மாநில ஒருங்கிணைப்பாளர் பால்ராசு, மாநில கொள்கை பரப்பு செயலாளர் சபேசன், மண்டல செயலாளர் பாலு, திருவாரூர் சக்திவேல் கலந்து கொண்டனர்.
News December 20, 2025
திருவாரூர்: 8th போதும்..ரூ.62,000 சம்பளத்தில் வேலை

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் (Driver) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
1. வகை: தமிழக அரசு
2. வயது: 18-37
3. சம்பளம்: Rs.19,500 – Rs.62,000
4. கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி!
5. கடைசி தேதி: 02.01.2026
6. மேலும் தகவலுக்கு:<
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News December 20, 2025
காவல்துறை பறிமுதல் செய்த வாகனங்கள் ஏலம்

திருவாரூர் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மதுவிலக்கு மற்றும் கஞ்சா குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் ஏலம் வரும் 24-ம் தேதி புதன்கிழமை அன்று காலை 10 மணிக்கு திருவாரூர் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற உள்ளது. ஏலத்தில் பங்கேற்போர் 4 சக்கர வாகனத்திற்கு ரூ.2000, இருசக்கர வாகனத்திற்கு ரூ.1000 முன்பணம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது


