News April 13, 2024

திருவாரூர்: காந்தி சிலை முன்பு வயதான தம்பதி உண்ணாவிரதம்

image

முத்துப்பேட்டை அடுத்த பின்னத்தூர் இடையர்காடு கிராமத்தை சேர்ந்தவர் கோதண்டராமன். அவரது மனைவி தங்கராணி ஆகியோர் தனது பகுதிக்கு குடிநீர் வசதி செய்து தரக்கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு இன்று உண்ணாவிரதம் இருந்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி ஏப்ரல்.25ஆம் தேதிக்குள் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதால் அங்கிருந்து புறப்பட்டனர்.

Similar News

News September 1, 2025

திருவாரூர்: தெரு நாய்கள் தொல்லையா? இத செங்க!

image

தமிழகத்தில் அண்மைக்காலமாகத் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துக் காணப்படுகிறது. மேலும், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தெரு நாய்கள் கடிக்கு ஆளாகின்றனர். இனி தெருக்களில் கூட்டம் கூட்டமாகத் திரியும் தெரு நாய்களைக் கண்டு அச்சமடையவோ, கவலையோ வேண்டாம் உங்கள் பகுதியில் தெரு நாய்கள் தொடர்பான புகார்களைத் தெரிவிக்க 1100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்!

News September 1, 2025

எட்டு வயது சிறுவன் பாம்பு கடித்து பலி

image

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள கொல்லுமாங்குடி பில்லூர் கிராமத்தைச் சேர்ந்த 8 வயது சிறுவன் கவின் என்பவர் வீட்டிற்கு அருகே விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென அங்கு வந்த பாம்பு சிறுவனை கடித்தது. இதையடுத்து உடனடியாக நன்னிலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அச்சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

error: Content is protected !!