News September 15, 2025

திருவாரூர்: கம்யூனிஸ்ட் கட்சியினரின் பாடை ஊர்வலம்!

image

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி பகுதியில் உள்ள அத்திக்கடை, பாமணி கிராமங்களில் மக்கள் சந்திக்கக் கூடிய அடிப்படை பிரச்சனைகளை அரசுக்கு அடையாளப்படுத்தும் விதமாக பாடை ஊர்வல போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் தலைமையில் இன்று (செப்.15) நடைபெற்றது. இந்தப் போராட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.ஜோதிபாசு முன்னிலை வகித்தார்.

Similar News

News September 15, 2025

திருவாரூர்: ஆன்லைனில் பட்டா பெறுவது எப்படி?

image

புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், <>eservices.tn.gov.in<<>> என்ற இணையதளத்திற்கு சென்று, அதில் ‘Apply Patta transfer’ என்ற ஆப்ஷன் மூலமாக வீட்டிலிருந்த படியே புதிய பட்டாவிற்கு நீங்கள் விண்ணப்பிக்கலம். SHARE பண்ணுங்க!

News September 15, 2025

திருவாரூர்: கரண்ட் பில் குறித்து சந்தேகமா? இத செய்ங்க!

image

திருவாரூர் மக்களே, வீட்டு கரண்ட் பில் குறித்த சந்தேகங்களுக்கு இனி கவலை வேண்டாம். <>இங்கு க்ளிக் செய்து<<>> உங்க சர்வீஸ் எண், ரசீது எண் மற்றும் மொபைல் எண் குறிப்பிட்டு REGISTER பண்ணுங்க. மாதம் எவ்வளவு கரண்ட் பில் என தகவல் உங்க போனுக்கே வந்திடும். மேலும் தகவல்களுக்கு 9498794987 என்ற எண்ணுக்கு அழைக்கலாம். இத்தகவலை அனைவருக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க…

News September 15, 2025

திருவாரூர் மாவட்டத்தில் 1067 வழக்குகளில் சமரச தீர்வு

image

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் லோக் அதாலத் எனப்படும் தேசிய மக்கள் நீதிமன்றங்கள் நடைபெற்றன. இதில் சிவில் ஜீவனாம்சம், காசோலை, மோட்டார் வாகன வழக்குகள், வங்கி வாராக் கடன் ஆகியவை எடுத்துக் கொள்ளப்பட்டன. 2723 வழக்குகளில் 1067 வழக்குகள் தீர்வு காணப்பட்டது. ரூ 3.56 கோடி மதிப்பிற்குரிய சமரச தீர்வு காணப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!