News May 7, 2024

திருவாரூர் கம்பீரமான தியாகராஜ சுவாமி கோயில்!

image

திருவாரூரிலுள்ள தியாகராஜ கோயில், சைவ மரபில் பெரிய கோயில், திருமூலட்டானம், பூங்கோயில் என்று அழைக்கப்படுகிறது. நாயன்மார்களால் பாடல் பாடப்பெற்ற இத்தலத்தில், உலகின் மிகப் பெரித் தேரான ஆழித்தேர் கொண்ட கோயிலாகும். இக்கோயிலில் பசுவிற்கு நீதி வழங்கினான் மனுநீதிச்சோழன். பழமையான புராணங்களை கொண்ட இத்தலம் 2000-3000 வருடங்களுக்கு முந்தையது. 9 ராஜகோபுரமும், 80 விமானமும், 12 மதிகள் கொண்ட கம்பீரமான தோற்றமுடையது.

Similar News

News November 20, 2024

விவசாயிக்கு இழப்பீடு பதிவு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

image

மன்னார்குடியை சேர்ந்த விவசாயி ரமேஷ், நீடாமங்கலம் இந்தியன் வங்கியில் கடன் பெற்று டிராக்டர் வாங்கியுள்ளார் கடனை முழுமையாக செலுத்திய பின்பும்,ஆர்.சி புத்தகத்தை வழங்காத வங்கி மீது மன்னார்குடி நுகர்வோர் சங்கத்தின் வேல்முருகன் திருவாரூர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்த நிலையில், இழப்பீடாக ரூ.1.10 லட்சம் மற்றும் ஆர்.சி புத்தகத்தை வழங்க நுகர்வோர் நீதிமன்றம் வங்கிக்கு நேற்று அதிரடி உத்தரவிட்டது

News November 20, 2024

திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

image

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் இன்று (20.11.2024) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தூத்துக்குடி, தென்காசி, நெல்லையை தொடர்ந்து திருவாரூரில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்

News November 19, 2024

திருவாரூர் மாவட்டத்துக்கு மழை எச்சரிக்கை

image

தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழக டெல்டா மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக தொடர் கனமழை மழை பெய்து வருகிறது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இன்று (நவ.19) இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்கிறதா? கமெண்டில் தெரிவிக்கவும். SHARE NOW!