News September 8, 2025
திருவாரூர்: கட்டணமில்லா வழக்கறிஞர் வேண்டுமா?

திருவாரூர் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
▶️திருவாரூர் மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 04366-226767
▶️தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
▶️Toll Free 1800 4252 441
▶️சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
▶️உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
▶️இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
Similar News
News September 9, 2025
தீண்டாமை சுவர் அகற்ற ஆட்சியர், எஸ்.பி-யிடம் மனு

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியில் உள்ள கோவில்பத்து என்கிற கிராமத்தில் பட்டியலின சமுதாய மக்கள் வசிக்கும் பகுதியை மறைத்து எழுப்பப்பட்ட தீண்டாமை சுவரை உடனடியாக அகற்றக்கோரி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பிலும் புகார் மனு இன்று அளிக்கப்பட்டது.
News September 9, 2025
சுற்றுலாதுறை விருது பெற விண்ணப்பிக்கலாம்- ஆட்சியர்

திருவாரூர் மாவட்டத்தில் சுற்றுலா துறை சம்பந்தப்பட்ட தொழில்புரிவோரக்கான விருதுகள் பெற செப்.15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று ஆட்சியர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார். கூடுதல் தகவல்களுக்கு திருவாரூர் மாவட்ட சுற்றுலா அலுவலகத்தை நேரிலோ அல்லது 7397715679 என்கிற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.
News September 8, 2025
பாஜக திருவாரூர் மாவட்ட நிர்வாகிகள் அறிவிப்பு

திருவாரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் இரண்டாம் கட்ட நிர்வாகிகள் பட்டியல் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஓப்புதலுடன் மாவட்ட தலைவர் விகே செல்வம் அறிவித்துள்ளார். அதன்படி, மாவட்ட துணை தலைவர்களாக எஸ்.பி அன்பழகன், வேதநாயகி, பக்கிரிசாமி, ரமாமணிபாஸ்கர் மற்றும் மாவட்ட செயலாளர்களாக செந்தில்குமார், கனிமாறன், ஜெயந்தி ஆகியோர் நியமிக்கபட்டுள்ளனர்.