News August 28, 2025
திருவாரூர்: இலவச வீட்டு மனை வேண்டுமா?

தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் வீடு மற்றும் நிலம் இல்லாதவர்களுக்கு கான்கிரீட் வீடு கட்ட இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அல்லது வட்டாட்சியர் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவலுக்கு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை (04366-221033) தொடர்பு கொள்ளவும். இதை அனைவருக்கும் SHARE பண்ணவும்!
Similar News
News August 29, 2025
அரசு தொடக்கபள்ளியில் குறுவள மைய கலை திருவிழா

கோட்டூர் ஒன்றியம் விக்கிரபாண்டியம் அரசு தொடக்கப்பள்ளியில் குறுவள மைய அளவிலான கலைத் திருவிழா போட்டிகள்,இன்று நடைபெற்றது இவ்விழாவிற்கு அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முத்து தலைமையிலும், வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர் பாபி மற்றும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஞானசேகரன் முன்னிலையிலும் மற்றும் ஏனைய ஆசிரியர்கள் நடுவர்களாக பங்கேற்றனர்.
News August 28, 2025
திருவாரூர்: இலவச சட்ட உதவிகள் வேண்டுமா?

திருவாரூர் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி ஆலோசனை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் போன்ற பல்வேறு வழக்குகளுக்கு வாதாட இலவசமாக வழக்கறிஞர் உதவியை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தகவலுக்கு திருவாரூர் மாவட்ட சட்ட ஆலோசனை மையத்தை (04366-226767) தொடர்பு கொள்ளலாம். இதை மறக்காமல் SHARE செய்யவும்!
News August 28, 2025
அரசுப் பள்ளிகளில் நாளை பள்ளி மேலாண்மை குழு கூட்டம்

தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறையின் உத்தரவின் படி, மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் நாளை (ஆக.29) மாலை 3 மணி முதல் 4:30 மணி வரை ஆகஸ்ட் மாதத்திற்கான பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடத்தப்பட வேண்டும். திறன் திட்டம், மணற்கேணி பள்ளி தூதுவர்கள் திட்டம் போன்ற பல்வேறு கல்வி வளர்ச்சி செயல்பாடுகள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட வேண்டும் என்று திருவாரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.