News December 29, 2025

திருவாரூர் இரவு ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில், நேற்று (டிச.28) இரவு 10 மணி முதல் இன்று (டிச.29) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

Similar News

News December 29, 2025

திருவாரூர்: பைக் வாங்க அரசு மானியம்!

image

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. விண்ணபிக்க <>https://tnuwwb.tn.gov.in என்ற இணையதளத்திற்கு<<>> செல்ல வேண்டும் அதில் Subsidy for e-scooter/என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும் பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றி வேண்டும். விண்ணப்பிக்க தெரியாதவர்கள் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News December 29, 2025

திருவாரூர்: புகையிலை விற்பனை-ஒருவர் கைது!

image

திருமக்கோட்டை அருகே உட்காடு தென்பரையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் திருமக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஒரு மளிகை கடையில் சோதனை செய்தனர். இதில் அந்த கடையில் ரூ.50,000 மதிப்பிலான 13 கிலோ புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து உட்காடு சாகுல் அமீது (55) என்பவரை கைது செய்தனர்.

News December 29, 2025

திருவாரூர்: பைக்குகள் மோதல்-ஒருவர் படுகாயம்

image

முத்துப்பேட்டை ஆலங்காடு கிழக்கு கடற்கரை சாலையில் வீரமணி (62) என்பவர் ஓட்டிவந்த பைக்கும், ராஜசேகரன்(43) என்பவர் ஓட்டிவந்த பைக்கும் மோதிக்கொண்டதில் வீரமணி படுகாயம் அடைந்து திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த முத்துப்பேட்டை போலீசார் ராஜசேகரனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!