News December 15, 2025
திருவாரூர்: இனி வரி செலுத்துவது ஈஸி!

திருவாரூர் மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின்கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி போன்றவற்றை செலுத்தவும், வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் சென்று அலைய வேண்டாம். நீங்களே<
Similar News
News December 17, 2025
திருவாரூர்: நீரில் மூழ்கி மீனவர் பலி!

முத்துப்பேட்டை கற்பகநாதர்குளம் காடுவெட்டி கிராமத்தைச் சேர்ந்த மீனவர் ரவி(58). இவர் நேற்று வளவனாற்றின் கடல் முகத்துவாரம் அருகே வலைவிரித்து மீன் பிடித்துள்ளார். அப்போது, திடீரென்று நீரில் மூழ்கி உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு சென்ற முத்துப்பேட்டை போலீசார் நீரில் மூழ்கி பலியான மீனவர் ரவியின் உடலை மீட்டு, வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News December 17, 2025
திருவாரூர் மாவட்டத்தில் தேர்வு ஒத்திவைப்பு!

திருவாரூர் மாவட்டத்தில் மின் கம்பியாளர், உதவியாளர் பதவிக்கான தேர்வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. டிச.13 மற்றும் டிச.14 ஆகிய தேதிகளில் மின் கம்பியாளர், உதவியாளர் தகுதிக்கான தேர்வு நடைபெற இருந்தது. இந்நிலையில் தேர்வானது நிர்வாக காரணங்களினால் வருகின்ற டிச.27 மற்றும் டிச.28 ஆகிய தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
News December 17, 2025
திருவாரூர் இரவு ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று (டிச.16) இரவு 10 மணி முதல் இன்று (டிச.17) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!


