News September 19, 2025
திருவாரூர்: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

திருவாரூர் மக்களே, உங்கள் வீடு அல்லது தெருவில் திடீரென மின்தடை ஏற்பட்டால், இனி லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. தற்போது, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, உங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News March 4, 2026
திருவாரூர்: பாஜகவில் இணைந்த திமுக நிர்வாகி!

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வர்த்தக சங்க பொருளாளர் டி.ஜெயசெல்வம் திமுகவில் இருந்து விலகி தன்னை பாஜகவில் மாநில பொதுசெயலாளர் கருப்பு முருகானந்தம் முன்னிலையில் இணைத்து கொண்டார். அதனைத் தொடர்ந்து புதிதாக இணைந்த ஜெயசெல்வத்திற்கு பாஜக மாவட்ட தலைவர் செல்வம் உட்பட பலரும் வாழ்த்துகள் தெரிவித்தனர்.
News March 4, 2026
திருவாரூர்: காரில் குட்கா பொருள்கள் கடத்திய இருவர் கைது!

நீடாமங்கலம் காவல் ஆய்வாளர் கலைவாணி மற்றும் போலீசார் ரோந்து பணியில் இருந்தனர். நகர் இருவழிச்சாலையில் வேகமாக வந்த காரை மடக்கி விசாரித்தனர். காரில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த முகேஷ் குமார் (28), குஜராத்தைச் சேர்ந்த சோமாபாய் (25) இருந்தனர். மேலும் காரில் குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் 320 கிலோ இருந்துள்ளது. இதனை அடுத்து உடனடியாக போலீசார், 2 பேரையும் கைது செய்தனர்.
News March 4, 2026
திருவாரூர்: மனைவியை எரித்த கணவர்!

சித்தமல்லி பகுதியைச் சேர்ந்தவர் ஐயப்பன். இவரது மனைவி ஜெயசித்ரா. இவர்களுக்கு திருமணமாகி 2 வருடங்களாக குழந்தை இல்லாததால் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பிப்.28 இருவருக்கும் தகராறு ஏற்பட்டதில் மனைவியின் உடலில் மன்னனை ஊற்றி ஐயப்பன் தீ வைத்ததாகக் கூறப்படுகிறது. தற்போது ஜெயசித்ரா மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ள நிலையில், பெருகவாழ்ந்தான் போலீசார் ஐயப்பனை கைது செய்துள்ளனர்.


