News April 5, 2025

திருவாரூர் ஆழித் தேரின் சிறப்புகள்!

image

திருவாரூர் தேர்த் திருவிழாவிற்கு தனி சிறப்பு உள்ளது. 1748 இல் நடந்த ஆழித் தேரோட்டம் பற்றி தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் ஆவணங்கள் உள்ளது. 1927ஆம் ஆண்டு இந்த தேர் முற்றிலும் தீயில் எரிந்தது. அப்போது 10,000 பேர் கூடி தேரை இழுத்ததாகவும், அதில் 10 சக்கரங்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த தேர் 7 அடுக்குகளுடன், 96 அடி உயரமும், சுமார் 300 டன் எடையும் கொண்டதாகும். உங்களுக்கு தெரிந்ததை கமெண்ட் பண்ணுங்க

Similar News

News July 5, 2025

திருவாரூர் இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

திருவாரூர் மாவட்டத்தில் (ஜூலை 4) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளன. இரவு நேரத்தில் ஏதேனும் குற்ற சம்பவங்கள் நடைபெற்றால், மேலே கொடுக்கப்பட்டுள்ள எண்ணை தொடர்ப்பு கொள்ளலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என திருவாரூர் மாவட்ட காவல் காவல்துறை அறிவித்துள்ளது.

News July 4, 2025

மாங்கல்ய வரம் அருளும் நெல்லிவனநாதர்

image

திருவாரூர் மாவட்டம் திருநெல்லிக்காவில் அமைந்துள்ள நெல்லிவனநாதர் திருக்கோயில் ஒரு சிறப்பு வாய்ந்த திருத்தலமாகும். இங்கு மூலவராக அருள்பாலிக்கும் நெல்லிவனநாதர், திருமணத் தடைகளை நீக்கி, மாங்கல்ய வரம் அருளும் அற்புத தெய்வமாக போற்றப்படுகிறார். இவருக்கு வஸ்திரம் சாத்தி அபிஷேகம் செய்து வழிபட்டால் திருமண தடை நீங்குமென நம்பப்படுகிறது. நீண்ட நாட்களாக திருமணம் ஆகாத உங்கள் நண்பர்களுக்கு இதனை ஷேர் பண்ணுங்க!

News May 8, 2025

திருவாரூர்: தமிழக வனத்துறையில் வேலைவாய்ப்பு

image

தமிழக வனத்துறையில் காலியாக உள்ள 257 வனக் காவலர், வனக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 18 முதல் 32 வயது வரை உள்ள, 10th, 12th முடித்தவர்கள் www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கவும். சம்பளமாக மாதம் ரூ.16,600 முதல் ரூ.57,900 வரை வழங்கப்படும். அரசு வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு இதை SHARE செய்யவும்!

error: Content is protected !!