News January 3, 2026
திருவாரூர்: ஆட்சியர் உதவித்தொகை அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் உழவர் பாதுகாப்பு அட்டை வைத்துள்ள குடும்பத்தினருக்கு 04-08-2025க்கு பிறகு மரணத்திற்கான உதவித்தொகை ரூ.30,000; ஈமச்சடங்கிற்கு ரூ.10,000; விபத்து உயிரிழப்புக்கான நிவாரணம் ரூ.2,00,000; உடல் உறுப்பு இறப்பிற்கான உதவித்தொகை ரூ.1,00,000 வழங்கப்படவுள்ளது. இதற்கு மாவட்டத்தில் உள்ள அந்தந்த பகுதிக்குரிய வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 27, 2026
திருவாரூர்: செல்போன் பயனாளிகளே உஷார்!

உங்கள் போனுக்கு வரும் அழைப்புகள் மற்றும் OTP எண்களைத் திருட சைபர் குற்றவாளிகள் ‘கால் பார்வேர்டிங்’ முறையைப் பயன்படுத்தலாம். இதைச் சரிபார்க்க உங்கள் மொபைலில் *#21# என்று டயல் செய்யுங்கள். அங்கு வேறு எண்களுக்கு ‘Forward’ ஆகிறதா என்பதை அறியலாம். அப்படித் தகவல்கள் கசிந்தால், உடனடியாக ##002# என டயல் செய்து அனைத்துப் பார்வேர்டிங் வசதிகளையும் ரத்து செய்யலாம். இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.
News January 27, 2026
திருவாரூர்: காவல்துறையினர் திடீர் ஆய்வு

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில் குடமுழுக்கு விழா நாளை (ஜன.28) நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து திருவாரூர் மாவட்டம் முழுவதும் அனைத்து ஒன்றியங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து வருகின்ற பொதுமக்கள் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கும், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் காவல் அதிகாரிகள் மற்றும் நகராட்சி தலைவர் சோழராஜன் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.
News January 27, 2026
திருவாரூர்: கடலோர எல்லையில் குடியேறும் போராட்டம்

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நேற்று (ஜன.26) குடியரசு தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அதனை புறக்கணித்து கடலோர ஊராட்சிகளில் வாழும் மக்களை பேரிடர்களிலிருந்து பாதுகாத்திட குடிமனை, இலவச வீடு கேட்டு ஜாம்புவானோடை கடலோர எல்லையில் மாவட்ட செயலாளர் வெற்றி தலைமையில் சுமார் 50 பேர் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


