News July 7, 2025
திருவாரூர் அருகே தீக்குளித்து பெண் தற்கொலை

திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி அருகே ஓட்டக்குடி பகுதியில் வசிப்பவர் சுஜாதா (33). இவரது கணவர் பிரபாகரன் துபாயில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி செல்போன் வாயிலாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த சுஜாதா சம்பவத்தன்று உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்து கொண்டதில் நேற்று முன்தினம் இரவு அவர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News August 21, 2025
நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் நடைபெறும் இடம்

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை வட்டாரத்துக்கு உட்பட்ட கீழநம்மகுறிச்சி சமுதாயக்கூடம் பகுதியில் நாளை காலை 9 மணி முதல் மூன்று மணி வரை உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது. இதேபோல, மன்னார்குடி தாலுக்காவிற்கு உட்பட்ட உள்ளிக்கோட்டை பகுதியில் உள்ள விகேஎஸ் திருமண மண்டபத்தில் நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் அறிவித்துள்ளார்.
News August 21, 2025
இலவச வீடியோ ஒளிப்பதிவு மற்றும் வடிவமைப்பு பயிற்சி

திருவாரூர் ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு. தாட்கோ நிறுவனம் வழங்கும் இலவச வீடியோ ஒளிப்பதிவு மற்றும் வடிவமைப்பு பயிற்சி பெற ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின இளைஞர்கள், தாட்கோ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை நேரில் அணுகி அறிந்துகொள்ளலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.
News August 21, 2025
திருவாரூர்: ஆன்லைனில் பட்டா பெறுவது எப்படி?

புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், <