News December 18, 2025

திருவாரூர்: அரசு பஸ் மோதி தொழிலாளி பலி

image

குடவாசல் அருகே சிமிழி பகுதியைச் சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி பாக்கியராஜ் (34). இவர் நேற்று முன்தினம் மாலை வேலைக்கு சென்று விட்டு சிமிழியில் உள்ள தனது வீட்டுக்கு செல்வதற்காக கும்பகோணம்-திருவாரூர் சாலை புதுக்குடி அரசன் குட்டை அருகில் நடந்து சென்றுள்ளார். அப்போது கும்பகோணத்தில் இருந்து திருவாரூர் நோக்கி சென்ற அரசு பஸ், பாக்கியராஜ் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த பாக்கியராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.

Similar News

News December 20, 2025

காவல்துறை பறிமுதல் செய்த வாகனங்கள் ஏலம்

image

திருவாரூர் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மதுவிலக்கு மற்றும் கஞ்சா குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் ஏலம் வரும் 24-ம் தேதி புதன்கிழமை அன்று காலை 10 மணிக்கு திருவாரூர் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற உள்ளது. ஏலத்தில் பங்கேற்போர் 4 சக்கர வாகனத்திற்கு ரூ.2000, இருசக்கர வாகனத்திற்கு ரூ.1000 முன்பணம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

News December 20, 2025

திருவாரூர்: என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் வேலை

image

தமிழ்நாட்டில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 575
3. வயது: 18
4. சம்பளம்: ரூ.12,524 – ரூ.15,028
5. கல்வித் தகுதி: டிப்ளமோ (Engineering or Technology)
6. கடைசி தேதி: 02.01.2026
7. விண்ணப்பிக்க: <>[CLICK HERE]<<>>
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News December 20, 2025

திருவாரூர்: அரசு பள்ளி மாணவர்களுக்கு ரூ.10,000

image

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில், 10ஆம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவிகளுக்கு திறனாய்வு தேர்வுக்கு, வரும் டிச.26-க்குள் பள்ளி தலைமையாசிரியர் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வீதம் 10 மாதங்களுக்கு ரூ.10,000 வழங்கப்படும். இதற்கான தேர்வு ஜனவரி 31-ம் தேதி நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!