News April 9, 2024
திருவாரூர்:கூத்தாநல்லூரில் ரமலான் சிறப்பு தொழுகை

கூத்தாநல்லூர் அருகே உள்ள பொதக்குடி நோன்பு பெருநாள் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ரமலான் சிறப்பு தொழுகை (பிறை தெரிந்தவுடன்) பொதக்குடி நூரியா தெருவில் நூருல்லா நினைவு விளையாட்டு மைதானத்தில் காலை 7.15 மணிக்கும், சவுக்கத்தலி தெருவில் அமைந்துள்ள ஜன்னத்துல் பிர்தௌஸ் பள்ளிவாசலில் காலை 7 மணிக்கும், அப்துல்லா தெருவில் அமைந்துள்ள பாத்திமா பள்ளிவாசலில் காலை 6.45 மணிக்கும் நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது.
Similar News
News July 6, 2025
மன்னார்குடி தெப்பத்திருவிழா; கட்டுமான பணிகள் தீவிரம்

ஆசியாவிலேயே மிகவும் பெரிய தெப்பக்குளம் என்று போற்றப்படும் மன்னார்குடி ஹரித்ராநதி குளத்தில் வருகின்ற ஜூலை 10ம் தேதி இராஜகோபால சுவாமி கோயில் தெப்பத்திருவிழா நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு தெப்பம் கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கடந்த நூறு வருடங்களுக்கு மேலாக மன்னார்குடி வர்த்தக சங்கத்தினர் இந்த திருவிழாவை உபயமாக ஏற்று செய்து வருகின்றனர்.
News July 5, 2025
திருவாரூர்: ரூ.1.2 லட்சம் சம்பளத்தில் அரசு வேலை!

மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 1340 Junior Engineer பணியிடங்களை நிரப்ப மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு டிப்ளமோ, B.E / B.Tech முடித்தவர்கள் <
News July 5, 2025
திருவாரூர்: மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம்

“மன்னார்குடி கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஜூலை 11 காலை 11 மணிக்கு மாற்றுத்திறனாளிக்கான சிறப்புக் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் அவர்களது நலத்திட்ட கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் நோக்கத்தில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் திருவாரூர் கோட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் எழுத்துப்பூர்வமான மனுக்களுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.” என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.