News April 7, 2025

திருவாரூருக்கு இன்று உள்ளூர் விடுமுறை

image

திருவாரூரில் புகழ்பெற்ற தியாகராஜர் கோயில் ஆழித்தேரோட்டம் இன்று (ஏப்.07) நடைபெற உள்ளது. இதனால் திருவாரூர் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை புரிய உள்ளனர். இதனை முன்னிட்டு இன்று திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. (SHARE பண்ணுங்க)

Similar News

News April 8, 2025

திருவாரூர் வேலைவாய்ப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் (CUSTOMER CARE MANAGER) காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஊதியமாக ரூ.15,000 வழங்கப்படுகிறது.டிகிரி முடித்துவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் இங்கே <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நபர்களுக்கு SHARE செய்யுங்கள்.

News April 8, 2025

திருவாரூர் மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

image

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நேற்று காலை வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவெடுத்தது. இதன் காரணமாக இன்று (ஏப்.08) திருவாரூர் மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உங்கள் பகுதியில் மழையா கமெண்ட் பண்ணுங்க. இந்த தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க!

News April 8, 2025

திருவாரூர் வரும் கனிமொழி எம்.பி

image

திருவாரூர், தெற்கு வீதியில் வருகின்ற ஏப்.13-ஆம் தேதி மாலை 5 மணியளவில் தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை சார்பாக வக்ஃப் திருத்த சட்டத்தை எதிர்த்து மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் திமுக துணை பொது செயலாளரும், திமுக நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி எம்பி கலந்துகொண்டு கண்டன பேருரை ஆற்றுகிறார். மேலும் இந்நிகழ்வில் அமைச்சர், எம்.எல்.ஏ உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.

error: Content is protected !!