News May 9, 2024

திருவாரூரில் 4 இடத்தில் குடிநீர் திட்ட பணிகள் தீவிரம்

image

ரூ.78 கோடியில் அம்ரூட் குடிநீர் திட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அம்மையப்பன் ஓடம்போக்கி ஆற்று கரையில் புதிதாக 5 ராட்சத போர்வெல் அமைக்கப்பட்டுள்ளது. 4 இடங்களில் 13 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. கிடாரங்கொண்டான், கொடிக்கால் பாளையம், கேடிஆர் நகர், ஈவிஎஸ் நகர் ஆகிய இடங்களில் இந்த நீர்த் தேக்க தொட்டிகள் கட்டப்படுகிறது.

Similar News

News August 29, 2025

திருவாரூர்: இன்ஜினியர் பணியிடங்கள் அறிவிப்பு

image

மத்திய அரசின் மின்சாரத்துறையில் காலியாக உள்ள 1543 இன்ஜினியர் மற்றும் சூப்பர்வைசர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 18 வயது நிரம்பிய B.Sc., B.E., B.Tech., M.Tech., M.E., படித்தோர் விண்ணப்பிக்கலாம். மாதம் சம்பளமாக ரூ.30,000 முதல் ரூ.1,20,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக் செய்து<<>> செப்.17-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இத்தகவலை அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்.

News August 29, 2025

திருவாரூர் மாவட்டம் உருவான கதை

image

தமிழ்நாடு அரசு உத்தரவின்படி, 01.01.1997 முதன் தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டு, நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து 9 ஒன்றியங்களும், தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து 1 ஒன்றியத்தையும் சேர்த்து திருவாரூரைத் தலைமையிடமாகக் கொண்டு திருவாரூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டம் 2 வருவாய்க்கோட்டங்களையும், 9 வருவாய் வட்டங்களையும், 10 ஒன்றியங்களையும், 573 வருவாய்க் கிராமங்களையும் கொண்டுள்ளது. SHARE IT NOW

News August 29, 2025

அரசு தொடக்கபள்ளியில் குறுவள மைய கலை திருவிழா

image

கோட்டூர் ஒன்றியம் விக்கிரபாண்டியம் அரசு தொடக்கப்பள்ளியில் குறுவள மைய அளவிலான கலைத் திருவிழா போட்டிகள்,இன்று நடைபெற்றது இவ்விழாவிற்கு அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முத்து தலைமையிலும், வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர் பாபி மற்றும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஞானசேகரன் முன்னிலையிலும் மற்றும் ஏனைய ஆசிரியர்கள் நடுவர்களாக பங்கேற்றனர்.

error: Content is protected !!