News January 5, 2025
திருவாரூரில் ரோந்து காவலர்களின் விவரம்

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (05.01.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இரவு நேர குற்றங்களை தடுக்க காவல் துறையின் உடனடி உதவிக்கு, இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம் அல்லது 100 டயல் செய்யவும் என காவல் துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News July 10, 2025
திருவாரூர்: ரூ.755 செலுத்தி ரூ.15 லட்சம் காப்பீடு பெறலாம்

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. குறைந்தது 18 வயது முதல் 65 வயது வரை உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். மேலும் தகவலுக்கு உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும்.
News July 10, 2025
திருவாரூர்: VAO லஞ்சம் வாங்கினால் என்ன செய்யலாம்?

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கத்திடமிருந்து கடன் வாங்கி கொடுப்பது உள்ளிட்டவை VAO-வின் முக்கிய வேலையாகும். இவற்றை சரியாக செய்யமால் VAO யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், திருவாரூர் மாவட்ட மக்கள் 04366226970 என்ற எண்ணில் புகாரளிக்கலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க
News July 10, 2025
திருவாரூர்: குறுவை பயிர் காப்பீடு-கலெக்டர் கொடுத்த தகவல்

திருவாரூர் மாவட்டத்தில் குறுவை பயிர் காப்பீடு செய்திட வருகிற 31-ம் தேதி கடைசி நாளாகும். எனவே, குறுவை பயிர் சாகுபடி விவசாயிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலோ, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலோ (இ-சேவை மையங்கள்), www.pmfby.gov.in என்ற இணையதளத்தில் நேரடியாகவோ நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் காப்பீடு செய்யலாம் என கலெக்டர் மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார். இந்த தகவலை SHARE செய்ங்க…