News February 11, 2025
திருவாரூரில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்.

திருவாரூர் வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் வேலை தேடும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் மயிலாடுதுறை சாலை நியூ பாரத் மெட்ரிகுலேஷன் பள்ளியில், பிப்.22இல் நடைபெறுகிறது. அதில் டிகிரி, ஐ.டி.ஐ. டிப்ளமோ, நர்சிங் வரை படித்தவர்கள் சுயவிவரம், ஆதார் கல்வி சான்று நகலுடன் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்த படிவத்துடன் கலந்து கொள்ள மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்
Similar News
News July 8, 2025
10th போதும் இந்தியன் ரயில்வேயில் வேலை!

திருவாரூர் மாவட்ட மக்களே, இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள ‘6238’ டெக்னீசியன் காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படவுள்ளது. இதற்கு, 10,12, ஐடிஐ முடித்தவர்கள் <
News July 8, 2025
திருவாரூர்: திடீர் தீ விபத்து-4 கூரை வீடுகள் சேதம்

திருவாரூர், பள்ளங்கோவில் புலியடி திடல் பகுதியில் ராஜேந்திரன் (65), செல்வராஜ் (70), தினேஷ் (35), சந்திரகாசன் (60) ஆகியோர் அடுத்தடுத்த வீடுகளில் வசித்து வருகின்றனர். நேற்று மதியம் 12 மணி அளவில் திடீரென இவர்கள் வீட்டில் தீப்பிடித்தது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆனால், அதற்குள் 4 வீடுகளும் தீயில் எரிந்து முற்றிலுமாக சேதமடைந்தன.
News July 8, 2025
திருவாரூர் ரோந்து பணி காவலர்கள் விவரம்

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (ஜூலை 7) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள், இரவு நேர குற்றங்களை தடுக்க காவல் துறையின் உடனடி உதவிக்கு, எங்களது இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யவும் என காவல்துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.