News August 16, 2024
திருவாரூரில் மகளிர் உரிமை தொகை பெற சிறப்பு முகாம்

திருவாரூர் மாவட்டத்தில் ரூ.1000 மகளிர் உரிமைத்தொகையை இதுவரை பெறாதவர்கள் விண்ணப்பிக்க சிறப்பு முகாம் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் ஆகஸ்ட்.17 (சனிக்கிழமை) முதல் ஆகஸ்ட்.20 (செவ்வாய்க்கிழமை) வரை மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. மகளிர் உரிமைத்தொகை பெற தகுதியுள்ள பெண்கள் இந்த சிறப்பு முகாமை பயன்படுத்தி கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் சாரூஸ்ரீ தெரிவித்துள்ளார்.
Similar News
News November 9, 2025
திருவாரூர்: வேளாண் பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு

திருவாரூர் மாவட்டத்தில் முதலமைச்சரின் உழவர் நல சேவை மையம் அமைக்க ரூ.10 லட்சம் முதல் ரூ.30 லட்சம் திட்ட மதிப்பில், ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை 30% மானியம் வழங்கப்படும் என்றும், மாவட்டத்திற்கு மொத்தம் 23 மையங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளன என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும், இதுகுறித்த தகவலுக்கு வேளாண் உதவி இயக்குநரை அணுகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News November 9, 2025
திருவாரூர்: ரூ.5 லட்சம் பரிசு வேண்டுமா?

திருவாரூர் மாவட்டத்தில், மாநில அளவிலான விளைச்சல் போட்டியில், விவசாயிகள் கலந்து கொண்டு மாநிலத்திலேயே அதிக மகசூல் பெறும் விவசாயிக்கு சி.நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தித் திறன் விருது வழங்கப்படும். சிறப்புப் பரிசாக ரூ.5 லட்சம் பரிசு மற்றும் ரூ.7,000 மதிப்புள்ள பதக்கமும் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு, விவசாயிகள் தங்கள் வட்டார வேளாண்மை உதவி இயக்குநரை அணுகலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
News November 9, 2025
திருவாரூர்: ரோந்து பணி அதிகாரிகள் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் (நவ.8) ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்தில் உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்களும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!


