News January 8, 2025

திருவாரூரில் போராட்டத்தில் ஈடுபட்ட 133 பேர் கைது

image

ஊரக வளர்ச்சி துறையில் காலியாக உள்ள ஊராட்சி செயலர் பதவிகளை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று (ஜன.7) திருவாரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து போலீசாருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் 16 பெண்கள் உட்பட 133 பேரை போலீசார் கைது செய்து காட்டூரில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

Similar News

News January 28, 2026

திருவாரூரில் உள்ள காசிக்கு நிகரான கோயில்

image

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அடுத்த ஸ்ரீவாஞ்சியத்தில் ஶ்ரீவாஞ்சிநாத சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் ராகுவும், கேதுவும் ஒரு உடல் கொண்டு காட்சியளிக்கின்றனர். மேலும் இங்கு எமதர்மனுக்கு தனி சன்னதி உள்ளது. எமதர்மனுக்கு பாவ விமோசனம் வழங்கிய இந்த கோயிலில் சிவபெருமானை தன் தோளில் சுமந்து எமதர்மன் தீர்த்தவாரி நடைபெறுகிறது. இக்கோயில் காசிக்கு நிகரான தலமாக கூறப்படுகிறது. தெரியாதவங்களுக்கு SHARE பண்ணுங்க.

News January 28, 2026

திருவாரூர்: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

திருவாரூர் மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்.
1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்.
2) அல்லது<> pmjay.gov.in<<>> இணையதளத்தில் ரேஷன் & ஆதார் கார்டு ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
3) விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News January 28, 2026

திருவாரூர்: இனி WhatsApp-இல் பட்டா, சிட்டா

image

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது. அதற்கு
1.8188869996 எண்ணை Save பண்ணுங்க.
2.WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க.
3.மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்ந்தெடுங்க.
4.நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp-ல் கிடைக்கும். இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. இத்தகவலை SHARE பண்ணுங்க.!

error: Content is protected !!