News September 20, 2025
திருவாரூரில் போக்குவரத்து மாற்றம்

திருவாரூர் தெற்கு வீதியில் தவெக தலைவர் விஜய் இன்று பிற்பகல் 3 மணியளவில் பரப்பரை மேற்கொள்ள உள்ள நிலையில், முன்னெச்சரிக்கையாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி மயிலாடுதுறை, திருத்துறைப்பூண்டி பேருந்துகள் விளமல் வழியாகவும், மன்னார்குடியில் இருந்து வரும் பேருந்துகள் புலிவலம், வழியாகவும், தஞ்சையிலிருந்து நாகை செல்லும் பேருந்துகள் அம்மையப்பன், வழியாகவும் திருப்பி விடப்பட்டுள்ளன.
Similar News
News September 20, 2025
திருவாரூர்: B.E போதும், ரூ.50,000 சம்பளம்!

திருவாரூர் பட்டாதாரிகளே, இந்த வாய்ப்பை Use பண்ணுங்க! Indian Oil Corporation Limited (IOCL) நிறுவனத்தில் காலியாக உள்ள Engineer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது. இதற்கு B.E./B.Tech படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.50,000 – ரூ.1,60,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News September 20, 2025
திருவாரூரில் இன்று களமிறங்கும் விஜய் !

தவெக தலைவர் விஜய் இன்று (செப்.20) தனது 2-ம் வார பரப்புரை சுற்றுப்பயணத்தை நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்ள உள்ளார். சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானம் மூலம் வரும் அவர், அங்கிருந்து சாலை மார்க்கமாக நாகை நோக்கி செல்ல உள்ளார். இதையடுத்து பிற்பகல் 3 மணியளவில் திருவாரூர் வரும் அவர், நகராட்சி அலுவலகம் அருகே தெற்கு வீதியில் மக்களை சந்தித்து பரப்புரையை மேற்கொள்ள உள்ளார். SHARE NOW!
News September 20, 2025
திருவாரூர்: வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

திருவாரூர் மக்களே, லைசன்ஸ் வைத்திருப்போர், வாகன உரிமையாளர்கள் ஆகியோருக்கு மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலே குறிப்பிடப்பட்டோர், தங்களது லைசன்ஸ் மற்றும் ஆவணங்களில் மொபைல் நம்பரை அப்டேட் செய்ய வேண்டும். இதை RTO ஆபீஸுக்கு செல்லாமலேயே, <