News September 21, 2024
திருவாரூரில் நாளை விவசாயிகள் கருத்தரங்கம்
திருவாரூர் மத்திய பல்கலைக்கழக அரங்கில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 1:30 மணி வரை பாரம்பரிய நெல் வயல்களில் நுண்ணுயிர் பெருக்கம் என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற உள்ளது. இதில் பாரம்பரிய நெல் சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகள் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர்புக்கு 8111080101 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News November 20, 2024
பருவமழை அவசர உதவிக்கு எண்கள் அறிவிப்பு
வடகிழக்கு பருவமழை துவங்கி தீவிரமடைந்துள்ள நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் மழைக்காலங்களில் தேவைப்படும் அவசர உதவிக்கு 24 மணி நேரமும் செயல்படக்கூடிய அவசர உதவி எண்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. உதவி தேவைப்படும் நபர்கள் 1077, 04366-226623 மற்றும் 9488547941 (வாட்ஸ்அப்) ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. SHARE NOW!
News November 20, 2024
திருவாரூர் சுயசான்று அடிப்படையில் கட்டிட அனுமதி
திருவாரூர் மாவட்டத்தின் 430 ஊராட்சிகளிலும் மனை பிரிவுகளுக்கான அனுமதி மற்றும் கட்டிட அனுமதி எளிதாக வழங்க, ஒற்றைச் சாளரை முறையில் விண்ணப்பங்கள் இணைய வழியில் பெறப்பட்டு உடன் அனுமதி வழங்கப்படும். இந்த நடைமுறையில் குடியிருப்பு கட்டிடங்களுக்கான அனுமதி சான்றிதழின் அடிப்படையில் வழங்கப்படவுள்ளது. விபரங்களுக்கு www.onlineppa.tn.gov.in தெரிந்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.
News November 20, 2024
திருவாரூரில் தனியார் வேலை வாய்ப்பு முகாம்
திருவாரூர் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நவம்பர் 22ஆம் தேதி நடைபெறும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில், தனியார் தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்டு 500க்கும் மேற்பட்ட தகுதியான நபர்களை வேலைக்கு தேர்ந்தெடுக்க உள்ளனர். இதில் கலந்து கொள்ள 18 வயது நிரம்பியவர்கள் தங்களின் ஆதார் அட்டை மற்றும் கல்விச்சான்றுடன் நேரில் செல்ல ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.