News September 30, 2025
திருவாரூரில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு

டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள், FL11 உரிமம் பெற்ற கடைகள் மற்றும் மதுபான கூடங்கள் வருகிற 02.10.2025-ம் தேதி அன்று இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அன்றைய நாள் மது பானங்கள் விற்பனை இல்லாத உலர் நாளாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News December 10, 2025
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் கொடுத்த அறிவிப்பு

சமுதாய மற்றும் வகுப்பு நல்லிணக்கத்திற்கான கபீர் புரஸ்கார் விருது குடியரசு தின விழாவில் வழங்க விண்ணப்பிக்கும் முறை ஆட்சியர் அலுவலகம் மூலம் வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக இணைப்பு கட்டடப் பகுதியில் டிசம்பர் 15 அன்று விண்ணப்பிக் கடைசி நாள் எனவும் https://award.tn.gov.in இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என திருவாரூர் ஆட்சியர் அறிவித்துள்ளார்.
News December 10, 2025
திருவாரூர்: ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டம்

திருவாரூர் மாவட்டத்தில் டிட்டோ ஜாக் சார்பில் வருகின்ற டிச.12-ம் தேதி அன்று முழு வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி நடைபெறும் இப்போராட்டத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் திருவாரூர் மாவட்ட ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் முழுமையாக பங்கேற்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
News December 10, 2025
திருவாரூர்: வாக்காளர் பட்டியல்-ஆட்சியர் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 4 சட்டமன்ற தொகுதிகளில் அமைந்துள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும்; பெயர் சேர்த்தல் படிவம் 6 உதவி சேவை மையங்களிலும் வரும் டிச.11-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் தகுதி உடைய நபர்கள் படிவம் 6-ல் விண்ணப்பித்து பெயரினை சேர்த்து பயனடையுமாறு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் அறிவுறுத்தியுள்ளார்.


