News August 7, 2025
திருவாரூரில் உள்ள காசிக்கு நிகரான தலம்

திருவாரூர், நன்னிலம் அடுத்த ஸ்ரீவாஞ்சியத்தில் ஶ்ரீவாஞ்சிநாத சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் ராகுவும், கேதுவும் ஒரு உடல் கொண்டு காட்சியளிக்கின்றனர். மேலும் இங்கு எமதர்மனுக்கு தனி சன்னதி உள்ளது. எமதர்மனுக்கு பாவ விமோசனம் வழங்கிய இந்த கோயிலில் சிவபெருமானை தன் தோளில் சுமந்து எமதர்மன் தீர்த்தவாரி நடைபெறுகிறது. இக்கோயில் காசிக்கு நிகரான தலமாக கூறப்படுகிறது. தெரியாதவங்களுக்கு SHARE பண்ணுங்க.
Similar News
News August 7, 2025
ஐடிஐ-யில் நேரடி சேர்க்கை; கால அவகாசம் நீட்டிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலம், கோட்டூர், வண்டாம்பாளை ஆகிய அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் 2025 ஆம் ஆண்டிற்கான நேரடி சேர்க்கை வரும் ஆக.31 தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே எட்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் நேரடியாக விண்ணப்பிக்கலாம் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் அறிவித்துள்ளார்.
News August 7, 2025
திருவாரூரில் பட்டா வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு!

திருவாரூர் மக்களே உங்களது நிலம் தொடர்பான ஆவணங்கள் குறித்து எளிதில் <
News August 7, 2025
நெகிழி பயன்படுத்தாத உணவகங்களுக்கு விருது

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “திருவாரூர் மாவட்டத்தில் நெகிழி பயன்படுத்தாத உணவகங்கள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும், விவரங்களுக்கு திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்.” என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.