News December 15, 2024

திருவாரூரில் இலவச சிசிடிவி கேமரா பயிற்சி

image

திருவாரூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் சார்பாக, திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது முதல் 45 வயது உள்ள ஆண்களுக்கான இலவச சிசிடிவி கேமரா பயிற்சி முகாம் வரும் டிச.26 தொடங்கி 13 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த பயிற்சியில் சேர விருப்பமுள்ளவர்கள் 04366-299014, 9952577595 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்

Similar News

News March 7, 2026

திருவாரூர்: அதிமுக தேர்தல் பணிமனை அமைக்கும் பணி

image

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்கான அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் தேர்தல் பணிமனை அமைப்பதற்கான பந்த கால் முகூர்த்த விழா நேற்று (மார்ச் 06) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் இரா.காமராஜ் மற்றும் அதிமுக நிர்வாகிகளுடன், பாஜக, அமமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

News March 7, 2026

திருவாரூர்: 412 கிலோ போதைப் பொருட்கள் அழிப்பு!

image

திருவாரூர் மாவட்டத்தில் கஞ்சா, குட்கா போன்ற தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை, கடத்துதல் போன்றவற்றில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து போலீசார் அவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்தவகையில் திருவாரூர் மாவட்டம் முழுவர்கும் பறிமுதல் செய்யப்பட்ட 412 கிலோ குட்கா போன்ற போதைப் பொருட்கள், நெய்விளக்கு பகுதியில் உள்ள நவீன எரிவாயு தகன மேடையில் அடுக்கி வைத்து தீ மூலம் அழிக்கப்பட்டது.

News March 7, 2026

திருவாரூர் இரவு ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.6) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.7) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!