News April 4, 2025

திருவாரூரில் இப்படி ஒரு இடமா?

image

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதியில் உள்ள அலையாத்திக்காடு ஆசியா கண்டத்திலேயே மிகப்பெரியதாகும். முத்துப்பேட்டையில் 12,020 ஹெக்டேர் பரப்பளவில் உள்ள இக்காடுகள், தஞ்சை அதிராம்பட்டினத்தில் தொடங்கி நாகை கோடியக்கரை வரை நீண்டுள்ளது. கடந்த வருடம் இந்த அலையாத்திக் காடுகள் நடுவே வனத்துறை சார்பில் ‘தமிழ் வாழ்க’ எனும் சொற்கள் வடிவில் வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது. SHARE பண்ணுங்க..

Similar News

News April 11, 2025

திருவாரூர்: வாலிபால் வீரர்களுக்கு அருமையான வாய்ப்பு

image

திருவாரூர் வேலுடையார் மேல்நிலைப் பள்ளியில் நாளை (ஏப்.12) மதியம் 2 மணியளவில் வாலிபால் விளையாட்டு வீரர்களுக்கான தேர்வு நடைபெறுகிறது. இதில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு திருவாரூர் அருகில் உள்ள அம்மையப்பன் குளோபல் கலைக் கல்லூரியில் இலவச சேர்க்கை, உணவு மற்றும் தங்குமிடம் வழங்கப்படும் என கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. வாலிபால் விளையாடும் உங்க நண்பருக்கு இதை மறக்காமல் SHARE செய்யவும்!

News April 11, 2025

ரேஷன் கார்டில் திருத்தும் செய்யணுமா?

image

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களில் ரேஷன் அட்டை திருத்த முகாம் நாளை (ஏப்ரல் 12) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறவுள்ளது. ரேஷன் கார்டில் பெயர் நீக்கம், திருத்தம், சேர்த்தல், முகவரி மாற்றம், மொபைல் நம்பர் அப்டேட் போன்ற அப்டேட்களை இலவசமாக செய்து கொள்ளலாம் கட்டணம் இல்லை. ரேஷன் கார்ட் வைத்திருக்கும் அனைவருக்கும் SHARE செய்து உதவவும்.

News April 11, 2025

திருவாருர் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை வேலைநாள்

image

திருவாருர் மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் 26, 27.11.2024 அன்று மழைக்கால விடுமுறை விடப்பட்டது. அதனைஈடு செய்யும் விதமாக 12.04.2025 மற்றும் 19.04.2025 ஆகிய இரண்டு சனிக்கிழமைகளும் பள்ளிகள் முழு வேலை நாளாக செயல்படும் என திருவாரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!