News April 11, 2025
திருவாருர் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை வேலைநாள்

திருவாருர் மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் 26, 27.11.2024 அன்று மழைக்கால விடுமுறை விடப்பட்டது. அதனைஈடு செய்யும் விதமாக 12.04.2025 மற்றும் 19.04.2025 ஆகிய இரண்டு சனிக்கிழமைகளும் பள்ளிகள் முழு வேலை நாளாக செயல்படும் என திருவாரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.
Similar News
News April 18, 2025
தியாகி களப்பால் குப்புசாமியின் நினைவு தினம் இன்று …

திருவாரூர் மாவட்டம், களப்பால் கிராமத்தில் அருணாசலம்-சமுத்திரத்தம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர் குப்புசாமி. தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் வாழ்ந்த ஏழை விவசாய தொழிலாளர்களின் விடிவெள்ளியாக திகழ்ந்த இவர், தொடர் போராட்டங்களை முன்னெடுத்து, தூக்கு தண்டனை பெற்று உடல்நலக்குறைவால் திருச்சி சிறையில் உயிரிழந்தார். திருவாரூர் மண்ணின் மைந்தர் களப்பால் குப்புசாமியின் 77-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று! SHARE.
News April 18, 2025
திருவாரூர்: ரயில்வே வேலை வாய்ப்பு

இந்திய ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் (RRBs) சார்பில் தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள 510 உதவி லோகோ பைலட் (ALP) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. டிப்ளமோ, பி.ஈ/பி.டெக் முடித்த 18 முதல் 30 வயதுக்குட்பட்ட நபர்கள் rrbchennai.gov.in என்ற இணையதளம் வாயிலாக இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 11.05.2025. மத்திய அரசு வேலை தேடும் நபர்களுக்கு இதை ஷேர் செய்யவும்.
News April 18, 2025
திருவாரூர்: ரேஷன் புகார் அளிக்க சிறப்பு எண்

தமிழகத்தில் பல திட்டங்கள் மக்கள் நன்மைக்காக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதிலொன்றுதான் மக்களுக்கு இலவசம் (ம) குறைந்த விலையில் ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம். தங்கள் பகுதியில் உள்ள ரேஷன் தொடர்பான புகார்களை, உங்கள் மாவட்டத்தில் சம்பந்தப்பட்ட துறைக்கு 04366 220510, 9445000295 ஆகிய எண்களில் புகார் அளிக்கலாம். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.