News April 9, 2025
திருவாருர் மாவட்ட பள்ளிகளுக்கு சனிக்கிழமை வேலைநாள்

திருவாருர் மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் 26.11.2024, 27.11.2024 அன்று மழைக்கால விடுமுறை விடப்பட்டதை ஈடு செய்யும் விதமாக 12.04.2025 மற்றும் 19.04.2025 ஆகிய இரண்டு சனிக்கிழமைகளும் பள்ளிகள் முழு வேலை நாளாக செயல்படும் என திருவாரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.
Similar News
News November 15, 2025
திருவாரூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் (நவ.14) இரவு 10 மணி முதல், காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு தங்களது புகார்களை அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.
News November 14, 2025
திருவாரூர்: ஆசிரியர் தகுதி தேர்வு குறித்து தகவல்

டிஆர்பி நடத்தும் ஆசிரியர்கள் தகுதி தேர்வு தாள் 1 திருவாரூர் மாவட்டத்தில் 8 தேர்வு மையங்களில் 1843 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர். 2ம் தாள் 19 மையங்களில் 1370 தேர்வர்கள் எழுதுகின்றனர். தேர்விற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தேர்விற்கு 8.30 முதல் 9.30குள் தேர்வு அறைக்குச் செல்ல வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
News November 14, 2025
திருவாரூர்: முன்னால் அமைச்சர் குழந்தைகள் தின வாழ்த்து

திருவாரூர் மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னால் உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ் எம்எல்ஏ, இன்று குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் குழந்தைகள் நம் தேசத்தின் நாளைய நம்பிக்கை நட்சத்திரம், குழந்தைகள் எல்லோரும் பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும், கல்வி விளையாட்டு, கலை, அறிவியல் அனைத்திலும் சிறந்து விளங்கிட வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.


