News October 27, 2024

திருவாருர் மாவட்டத்தில் 40 பேர் கைது

image

திருவாருர் மாவட்டத்தில் எஸ்பி ஜெயக்குமார் உத்தரவின் பேரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அந்தந்த பகுதி காவல் சரக போலீசார் தொடர்ந்து பகல் மற்றும் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டதில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட மொத்தம் 40 நபர்கள் கைது செய்யப்பட்டு போலீசார் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை தொடரும் என எஸ்பி ஜெயக்குமார் இன்று தெரிவித்தார்.

Similar News

News February 1, 2026

திருவாரூர்: சோலார் பம்புசெட் வேண்டுமா?

image

தமிழக அரசு விவசாயிகளுக்கு 70% மானியத்தில் சூரிய ஒளியில் இயங்கும் பம்புசெட்டுகளை வழங்கி வருகிறது. 70 சதவீதத்தில், 40 % மாநில அரசும், 30% மத்திய அரசும் வழங்குகிறது. இதற்கு <>உழவன் App<<>> மூலமாக விண்ணப்பித்து, பெயரை முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் அறிய உங்கள் மாவட்ட வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தை அணுகவும். பிறரும் பயன்பெற SHARE செய்து உதவுங்க..

News February 1, 2026

திருவாரூர்: சொத்து தகராறா? Whatsapp-ல் தீர்வு!

image

திருவாரூர் மக்களே, இனி வக்கீல் ஆலோசனை பெற நீங்கள் அங்கும் இங்கும் அலைய வேண்டிய அவசியமில்லை. இதற்காக மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘72177 11814’ என்ற எண்ணிற்கு உங்களது Whatsapp-ல் இருந்து ஒரு மெசேஜ் அனுப்பினால் போதும், சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு போன்றவற்றிற்கு இலவச சட்ட ஆலோசனைகள் வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!

News February 1, 2026

திருவாரூர்: ஆழி தேரோட்ட பந்தக்கால் முகூர்த்தம்

image

உலகப்புகழ் பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோயில் பங்குனி உத்திரப் பெருவிழா ஆழித்தேரோட்டத் திருவிழாவிற்கான பந்தக்கால் முகூர்த்தம் இன்று (பிப்.1) காலை நடைபெற்றது. மேலும் காலை 9:30 மணிக்கு எம்பிரான் திருஞானசம்பந்தர் எழுந்தருளி ஆழித்தேரில் திருக்கோயிலும் பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!