News August 26, 2025

திருவான்மியூர் அருகே விபத்து: இளைஞர் பலி

image

திருவான்மியூரில் பைக், சைக்கிள் நேருக்கு நேர் மோதி சாலைத் தடுப்பில் இடித்ததில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரித்விக் ராய்(24) என்பவர் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு பெண் தோழியை அழைக்க பைக்கில் சென்ற போது விபத்தில் சிக்கி உயிரிழந்தார். மேலும், இவ்விபத்தில் சைக்கிளில் வந்த ரமேஷ் என்பவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Similar News

News August 26, 2025

சென்னை: B.E, B.Sc படித்தவர்களுக்கு வேலை

image

சென்னை உயர்நீதிமன்றத்தில் தொழில்நுட்ப பிரிவில் காலியாக உள்ள உதவி புரோகிராமர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.E, B.Sc, BCA, MCA,M.Sc படித்த 18 வயது முதல் 37 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.35,900-1,31,500 வரை வழங்கப்படும். இப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு நடத்தப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இந்த லிங்கில் <<>>வரும் செ.9-க்குள் விண்ணப்பிக்கலாம். (SHARE)

News August 26, 2025

தூய்மைபணியாளருக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு: மேயர் தகவல்

image

சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்தவர் வரலட்சுமி. இவர் மின்சாரம் தாக்கி பலியானார். இச்சம்பவம் தூய்மை பணியாளர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், சென்னை கண்ணகி நகரில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த தூய்மைப் பணியாளர் குடும்பத்திற்கு ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக மாநகராட்சிக் கூட்டத்தில் மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.

News August 26, 2025

சென்னை: இனி வாட்ஸ்-அப் போதும்

image

சென்னை மாநகராட்சியின் சேவைகள் இப்பொழுது WhatsApp-ல் கிடைக்கிறது.
• பிறப்பு சான்றிதழை பதிவிறக்கம் செய்யவேண்டுமா?
• ⁠சொத்து வரி மற்றும் பிற வரிகளைச் செலுத்த வேண்டுமா?
• ⁠மாநகராட்சியிடம் ஏதாவது புகாரைப் பதிவு செய்ய வேண்டுமா?
• ⁠சமுதாயக் கூடம், முதல்வர் படைப்பகம் போன்ற சேவைகளுக்கு முன்பதிவு செய்யவேண்டுமா?
மாநகராட்சியின் அனைத்து சேவைகளுக்கும் இனி “9445061913” என்னுக்கு எஸ்எம்எஸ் அனுப்புங்க.

error: Content is protected !!