News September 13, 2025
திருவள்ளூர்: IOB வங்கியில் வேலை

▶️இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள சிறப்பு அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன ▶️ இதற்கு Any Degree அல்லது B.E./B.Tech, MBA, M.Sc, MCA, M.E./M.Tech முடித்தவர்கள் விண்ணபிக்கலாம் ▶️ரூ.64,820 முதல் சம்பளம் வழங்கப்படும் ▶️ஆன்லைன் தேர்வு, நேர்காண மூலம் ஆட்கள் தேர்வு நடைபெறும் ▶️நவ.3ஆம் தேதிக்குள் www.iob.in/Careers என்ற இணையதளத்தில் விண்ணபிக்க வேண்டும் ▶️SHARE பண்ணுங்க!
Similar News
News September 13, 2025
கல்விக்கடன்: திருவள்ளூர் கலெக்டர் அறிவிப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மாணவ, மாணவியர் உயர்கல்வி பயில வழிவகை செய்திடவும், கல்விக் கடன் பெரும் வாய்ப்புகளை எளிதாக்கும் வகையில் வரும் (செப்-15) அன்று திருவேற்காடு, வீரராகவபுரம் பகுதியில் அமைந்துள்ள எஸ்.ஏ.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாபெரும் கல்விக்கடன் முகாம் நடத்தப்படவுள்ளதாக கலெக்டர் பிரதாப் அறிவித்துள்ளார்.
News September 13, 2025
வேப்பம்பட்டு: ரயில் மோதி ஒருவர் பலி

வேப்பம்பட்டு ரயில் நிலையம் அருகே இன்று காலை (செப்.13) தண்டவாளத்தை கடக்க முயன்ற 45 வயது மதிக்கத்தக்க நபர் மீது அவ்வழியே வந்த காவேரி விரைவு ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடந்து இறந்தவர் யார்? என்பது குறித்து அவனை நடத்தி வருகின்றனர்.
News September 13, 2025
திருவள்ளூர்: பெண் குழந்தை இருக்கா?

முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் விண்ணப்பித்து தமிழ்நாடு மின்விசை நிதிநிறுவனத்தில் வைப்பீடு பத்திரம் பெற்று 18 வயது பூர்த்தி அடைந்தும் முதிர்வுத் தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்காத பயனாளிகளின் விவரங்கள் tiruvallur.nic.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 044-29896049 என்ற எண்ணை தொடர்பு கொள்ள மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.