News December 5, 2025
திருவள்ளூர்: INTERVIEW இல்லாமல் மத்திய அரசு வேலை ரெடி!

India Post Payments Bank-ல் ஜூனியர் ஆசோசியட், அசிஸ்டண்ட் மேனேஜர் உள்ளிட்ட பதவிகளில் மொத்தம் 309 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு, பட்டப்படிப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கு 20 முதல் 35 வயதுடையவர்கள், இங்கு <
Similar News
News March 6, 2026
வெளியிட்டார் திருவள்ளூர் கலெக்டர்!

திருவள்ளூர் மாவட்டத்தில் 2026 சட்டமன்றப் பொதுத் தேர்தலை முன்னிட்டு, 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்திப் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், “எனது இந்தியா எனது வாக்கு” என்ற மாவட்டத் தேர்தல் அடையாள சின்னத்தை (MASCOT) மாவட்டத் தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித் தலைவருமான மு. பிரதாப் நேற்று (05.03.2026) வெளியிட்டார். இந்நிகழ்வின் போது துறை சார்ந்த அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
News March 6, 2026
மாதவரத்தில் தட்டி தூக்கிய திமுக!

மாதவரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் R. ராஜேந்திரன் மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் (MLA) சுதர்சனம் முன்னிலையில் நேற்று திராவிட முன்னேற்றக் கழகத்தில் (திமுக) இணைந்தனர். இந்த நிகழ்வு அரசியல் வட்டாரங்களில் பேசுபொருள் ஆகியுள்ளது.
News March 6, 2026
திருத்தணியில் அதிரடி கைது!

திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்தா சுக்லா உத்தரவின் பேரில், போலீசார் திருத்தணி ரயில் நிலையத்தில் நேற்று சோதனை நடத்தினர். அப்போது, 190 போதை மாத்திரைகளை கடத்தி வந்த அரக்கோணம் தாலுக்கா, தணிகைப் போரூர் கிராமத்தைச் சேர்ந்த சரவணன் (21) என்பவரைப் போலீசார் பிடித்தனர். இதனைத் தொடர்ந்து அவரைக் கைது செய்த போலீசார், அவரிடமிருந்த போதை மாத்திரைகளைப் பறிமுதல் செய்து அவரைச் சிறையில் அடைத்தனர்.


