News September 3, 2025
திருவள்ளூர்: B.Sc, B.Tech/B.E படித்திருந்தால் வேலை!

திருவள்ளூர் மக்களே, Engineers India Limited கம்பெனியில் காலியாக உள்ள Senior Manager, Manager, Engineer, Junior Secretary, பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.Sc, B.Tech/B.E படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.29,000 முதல் ரூ.2,40,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
Similar News
News September 5, 2025
பூந்தமல்லியில் நூதன பிளாஸ்டிக் ஒழிப்பு நிகழ்வு

பூந்தமல்லியில் பிளாஸ்டிக் ஒழிப்பு நிகழ்வு நகராட்சி சார்பில் நடைபெற்றது. இதனை விட்டு ஆடு மாடு ஆகியவற்றின் கழுத்தில் எங்களையும் வாழ விடுங்கள் என்ற பதாகை கட்டப்பட்டு பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நடத்தப்பட்டது. நிகழ்விற்கு பூந்தமல்லி நகராட்சி தலைவர் காஞ்சனா சுதாகர் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையர் சரவணகுமார், வட்டார சுகாதார அலுவலர் கோவிந்தராஜ், சுகாதார ஆய்வாளர் ஐயப்பன் முன்னிலை வகித்தனர்.
News September 5, 2025
திருவள்ளூரில் 13 பேருக்கு நல்லாசிரியர் விருது

தமிழகத்தில் சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களை தேர்வு செய்து முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் பெயரில் ஆண்டுதோறும் நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. அந்தவகையில் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த வரலட்சுமி, அருணன், ஏழுமலை, குமாரி, பவானி, நாகேந்திரன், வனிதா, புஷ்பலதா, ஆனந்த், ஹெலன் நிர்மலா, சண்முகம், மேரி, செல்வி, ஆகிய 13 பேர் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
News September 5, 2025
சிறுவன் கடத்தல் வழக்கில் ஜாமீன் ரத்து

திருவள்ளூர்: திருவேலங்காட்டில், கடந்த ஜூன் 7ம் தேதி காதல் விவகாரத்தில் இளைஞரின் (சகோதரர் ) சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், அப்பெண்ணின் தந்தை வனராஜ், மணிகண்டன் மற்றும் கணேசன் ஆகிய மூன்று பேருக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய கோரி சிபிசிஐடி தாக்கல் செய்த மனுவில் திருவள்ளூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.