News March 30, 2024
திருவள்ளூர்: 4.38 லட்சம் லிட்டர் ஆயில் பறிமுதல்

திருவள்ளூர் மாவட்டம் விச்சூர் கிராமம், S.P.நகர் பகுதியில் அரசு மானியத்துடன் வழங்கக்கூடிய, லாரி இன்ஜின்களுக்கு பயன்படுத்தும் கருப்பு ஆயிலை பதுக்கி கள்ள சந்தையில் விற்பதாக குடிமைப் பொருள் வழங்கல் அதிகாரிகளுக்கு நேற்று(மார்ச் 29) தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தனிப்படை போலீசார் சுமார் 4.38 லட்சம் லிட்டர் ஆயிலை பறிமுதல் செய்து 3 பேரை கைது செய்தனர். இருவரை தேடி வருகின்றனர்.
Similar News
News January 31, 2026
திருவள்ளூர்: இங்கு சென்றால் திருமணம் நிச்சயம்!

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., அரக்கோணம் செல்லும் வழியில் உள்ள திருப்பாச்சூர் தங்காதலி அம்மன் சமேத வசீஸ்வரர் கோயில் உள்ளது. வெகு நாட்களாக திருமணம் ஆகாதவர்கள், இங்குள்ள தங்காதலி தேவியை வழிபட்டால் தடை நீங்கி உடனே திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை. காலை: 6:00 – 12:00, மாலை 4:00 – இரவு 8:00 மணி வரை நடை திறக்கும். கடம்பத்தூர் ரயில் நிலையத்தில் இருந்து பஸ், ஷேர் ஆட்டோவில் இங்கு செல்லலாம்.( SHARE IT)
News January 31, 2026
திருவள்ளூரில் அதிரடி கைது!

மப்பேடு எறையாமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார்(37). இவர் நேற்று முன் தினம் திருவள்ளூர் தீயணைப்பு நிலையம் அருகே தனது மகனுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, மதுபோதையில் இருந்த 3 பேர் விஜயகுமாரிடம் வழி கேடுள்ளனர். மேலும், வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர்கள், அவரைத் தாக்கினர். இந்நிலையில், ராஜேஷ்(19), சங்கர்(22), சந்துரு(20) ஆகியோரை திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்கு பதிந்து, கைது செய்தனர்.
News January 31, 2026
ஆவடியில் அதிரடி கைது!

திருவள்ளூர்: ஆவடி காவல் ஆணையரகம் மத்திய குற்றப் பிரிவு போலீசாரால் கால்நடைத் துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி போலி பணி ஆணையினை பெற்று கொடுத்து ரூ.14,49,000/- பண மோசடி செய்த வழக்கு நடைபெற்று வந்தது. இதில் தொடர்புடைய நாகராஜன் என்ற நபரை நேற்று(ஜன.30) போலீஸ் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி நடவடிக்கை மேற்கொண்டனர்.


