News July 6, 2025

திருவள்ளூர் வானில் சர்வதேச விண்வெளி நிலையம்: நாசா தகவல்

image

சர்வதேச விண்வெளி மையம் பூமியிலிருந்து சுமார் 400 கி.மீ உயரத்தில் மணிக்கு 16முறை பூமியைச் சுற்றி வருகிறது. இந்த விண்வெளி மையத்தை சில சமயங்களில் வெறும் கண்ணால் பார்க்கலாம் என நாசா தெரிவித்துள்ளது. அதன்படி, ஜூலை 6முதல்10 வரை திருவள்ளூர் மக்கள் இரவு 8மணி முதல் 8.06மணி வரை வானில் காண முடியும் என நாசா அறிவித்துள்ளது. இது ஒரு அரிய வானியல் நிகழ்வாகும். இதை டக்குனு நண்பர்களுக்கு ஷேர் பண்ணி பாக்க சொல்லுங்க!

Similar News

News July 6, 2025

திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரங்கள் வெளியீடு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News July 6, 2025

பொன்னியில் சிறப்புரை ஆற்றிய அமைச்சர்

image

இன்று மாலை பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற பாக நிலை முகவர்கள் (BLA2) ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் நாசர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். மேலும் திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்பி அவர்கள் பங்கேற்று கருத்துரை வழங்கினார்‌. உடன் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராஜன் மற்றும் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் ரமேஷ் ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News July 6, 2025

பழமையான சக்தி வாய்ந்த கோயில்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஊத்துக்கோட்டையில் பாபஹரேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் தொன்மையானது. இந்த கோயிலுக்கு வந்து சிவா பெருமாளை மனதார தரிசிப்பதின் வழியே வீட்டில் இருக்கும் வறுமை நீங்கி, செல்வம் பெருகும் பக்தர்களின் என்பது நம்பிக்கையாக இருக்கிறது. மேலும் குடும்பத்தில் உள்ள பிரச்னைகள் தீர்ந்து போதும் என்பது ஐதீகம். கஷ்டத்தில் உள்ள நண்பர்களுக்கு பகிரவும்.

error: Content is protected !!