News July 5, 2024
திருவள்ளூர்: வட்டாட்சியர் உள்ளிட்ட 3 பேர் பணியிட மாற்றம்

கும்மிடிப்பூண்டி அருகே தேர்வழி கிராமத்தில் வண்டி பாதை ஆக்கிரமிப்பை அகற்றும் நிகழ்வில் ராஜ்குமார் என்பவர் தீக்குளித்து சென்னை கேஎம்சி மருத்துவனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். கவனக்குறைவாக செயல்பட்டதாக கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் ப்ரீத்தி, எளாவூர் குறுவட்ட வருவாய் ஆய்வாளர், தேர்வழி கிராம நிர்வாக அலுவலர் ஆகியோரை அதிரடியாக பணியிட மாற்றம் செய்து ஆட்சியர் பிரபு சங்கர் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Similar News
News July 8, 2025
திருவள்ளூர் காவல் துறை எச்சரிக்கை பதிவு

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ள பதிவில்
Cryptocurrency முதலீடு செய்தால் லட்ச கணக்கில் பணம் கிடைக்கும் என மூன்றாம் நபர்கள் தங்களிடம் பணத்தை முதலீடு செய்ய சொன்னாலோ அல்லது பணம் கேட்டாலோ அவர்களை நம்பி பணம் கொடுக்க வேண்டாம் என திருவள்ளூர் காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
News July 8, 2025
ஹவுஸ் ஓனருடன் பிரச்சனையா?

வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை என வாடகை வீட்டில் குடியிருப்போர் சந்திக்கும் பிரச்சனைகள் ஏராளம். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்க ஹவுஸ் ஓனர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு தந்தாலோ 1800 599 01234 / 9445000412 (வாடகை அதிகாரி) புகார் செய்யலாம் அல்லது உங்க பகுதி <
News July 8, 2025
வாடகை வீட்டில் இருப்போருக்கான உரிமைகள்

தமிழ்நாடு, வீட்டு வாடகை முறைப்படுத்துதலுக்கன புதிய சட்டம் 2017ன் படி ஹவுஸ் ஓனர் குடியிருப்பவர் வீட்டிற்குள் 7 மணிக்குள் அல்லது இரவு எட்டு மணிக்குப் பின்னர் செல்ல கூடாது. மூன்று மாத வாடகையை மட்டுமே முன் பணமாகப் பெற வேண்டும். ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட வாடகையை மட்டுமே பெற வேண்டும். வாடகை ஒப்பந்தம் முடியாமல் வீட்டை காலி செய்ய சொல்ல கூடாது. கட்டாயம் ரசிது தர வேண்டும். ஒப்பந்ததை பதிவு செய்ய வேண்டும்