News October 20, 2025

திருவள்ளூர்: ரோந்து காவலர்களின் விவரம்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (20.10.2025) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரங்கள், காவல் நிலையம் வாரியாக மக்களின் இலகுவான தொடர்புக்காக மாவட்ட காவல் துறையால் வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் அவசரகாலங்களில் அருகிலுள்ள காவல் அதிகாரிகளை நேரடியாக தொடர்புகொள்ளலாம். மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இரவு ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Similar News

News January 31, 2026

ஆவடியில் அதிரடி கைது!

image

திருவள்ளூர்: ஆவடி காவல் ஆணையரகம் மத்திய குற்றப் பிரிவு போலீசாரால் கால்நடைத் துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி போலி பணி ஆணையினை பெற்று கொடுத்து ரூ.14,49,000/- பண மோசடி செய்த வழக்கு நடைபெற்று வந்தது. இதில் தொடர்புடைய நாகராஜன் என்ற நபரை நேற்று(ஜன.30) போலீஸ் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி நடவடிக்கை மேற்கொண்டனர்.

News January 31, 2026

கும்மிடிப்பூண்டி அருகே துடிதுடித்து பலி!

image

ஆந்திர மாநிலம் சூளூர்பேட்டையைச் சேர்ந்தவர் மகாலட்சுமி(22). திருமணமாகி ஒரு ஆண்டில் கணவர் இறந்த நிலையில், கட்டட வேலை செய்து வந்தார். இந்நிலையில், நேற்று(ஜன.30) சக ஊழியர்களான அஜித்(22), மணிகண்டன்(37) ஆகியோருடன் பைக்கில் அல்லிபுகுளம் நோக்கிச் சென்றார். சாணப்புதூர் செல்லும் சாலையில் எதிரே வந்த கார் மோதியதில் தூக்கி வீசப்பட்ட மகாலட்சுமி படுகாயமடைந்து, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

News January 31, 2026

திருவள்ளூர்: இரவு ரோந்து காவல் அதிகாரி எண்கள்!

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 12 மணி முதல் நாளை காலை 7 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!