News April 10, 2025
திருவள்ளூர் ராணுவ தொழிற்சாலையில் வேலை

திருவள்ளூவர் மாவட்டம் ஆவடியில் உள்ள மத்திய அரசின் ராணுவ இன்ஜின் பேக்டரியில் பல்வேறு பணிகளுக்கு மொத்தம் 80 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ITI, B.E/B.Tech, MBA, M.E/M.Tech, ICAI, ICMAI படித்த 18-28 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ.21,000-ரூ.30,000 வரை வழங்கப்படும். மேலும், தகவலுக்கு <
Similar News
News November 7, 2025
திருவள்ளூர்: திருமணத்திற்கு 1 பவுன் தங்கம், ரூ.25,000!

திருவள்ளூர் மாவட்ட மக்களே! ஆதரவற்ற பெண்களுக்கு தமிழக அரசின் ‘அன்னை தெரசா நினைவு திருமண உதவி’ திட்டத்தின் கீழ் ரூ.25,000, 8 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது. 2) இதற்கு உங்கள் மாவட்ட, பகுதி சமூக நல அலுவலரை அணுக வேண்டும். 3.திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன்னரே விண்ணப்பிக்க வேண்டும். யாராவது ஒருவருக்காவது உதவும் ஷேர் பண்ணுங்க.
News November 7, 2025
திருவள்ளூர்: ரேஷன் கார்டு இருக்கா? நாளை சூப்பர் வாய்ப்பு!

திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை (நவ.8) குடும்ப அட்டைதாரர்களுக்கான குறைதீர் முகாம் நடைபெற உள்ளது. ஒவ்வொரு வட்ட வழங்கல் அலுவலகங்களில் இந்த முகாம் நடைபெறும். இதில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல்/நீக்குதல், முகவரி மாற்றம், தொலைபேசி எண் சேர்த்தல்/மாற்றம், அட்டையில் திருத்தம், புகைப்படம் எடுத்தல் போன்ற சேவைகள் வழங்கப்பட உள்ளது. மற்றவர்களுக்கும் ஷேர் செய்து இந்த தகவலை தெரியப்படுத்துங்க.
News November 7, 2025
திருவள்ளூர் மாவட்ட இரவு ரோந்து காவல் விவரங்களுக்கு

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று (நவ.6) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


