News January 18, 2026

திருவள்ளூர்: ராட்சத அலையில் சிக்கிய டிரைவர் பலி!

image

சோழவரம், ஆங்காடு கிராமத்தை சேர்ந்தவர் அஜித் குமார் (30). டிரைவராக உள்ளார். நேற்று காணும் பொங்கலையொட்டி காட்டுப்பள்ளி கடற்கரை பகுதிக்கு சென்றார். அங்கு அவர் குளிப்பதற்காக கடலில் இறங்கிய போது ராட்சத அலையில் சிக்கி இழுத்துச்செல்லப்பட்ட அஜித்குமார், பரிதாபமாக பலியானார். கரை ஒதுங்கிய அஜித்குமாரின் உடலை காட்டூர் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Similar News

News January 26, 2026

திருவள்ளூரில் துடிதுடித்து பலி!

image

பள்ளிப்பட்டு தாலுகா கீளப்பூடி கிராமம் ராமர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கிரி(39). டிரைவரான இவர், கடந்த 20ஆம் தேதி பைக்கில் பொதட்டூர் பேட்டை பஜார் தெருவில் சென்றார். அங்கிருந்து தனது கிராமத்திற்கு திரும்பிய போது, எதிரே வந்த டிராக்டர் மோதியதில் தூக்கி விசப்பட்டு, படுகாயமடைந்தார் . இதையடுத்து, சென்னை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தவர், சிகிச்சை பலனின்றி கடந்த ஜன.23 உயிரிழந்தார்.

News January 26, 2026

திருவள்ளூரில் மின்சார ரயில்கள் இயங்காது!

image

திருவள்ளூர்: பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜன.27) சென்ட்ரலிலிருந்து காலை 5:40, சூலூர்பேட்டையிலிருந்து காலை 7:50, மதியம் 12:35, நெல்லூரிலிருந்து காலை 10:20, ஆவடியிலிருந்து காலை 4:25 ஆகிய நேரங்களில் கிளம்பும் ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டன. சென்ட்ரலிலிருந்து காலை 4:15, 5:00, சூலூர்பேட்டையிலிருந்து காலை 6.45, 7.25 ரயிலும் பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகின்றன. இந்தத் தகவலை உடனே SHARE!

News January 26, 2026

திருவள்ளூரில் விஷம் குடித்து தற்கொலை!

image

பள்ளிப்பட்டு அருகே வசிப்பவர் ராஜேந்திரன்(55). இவரது மகன் குகன், ராணுவத்தில் பணி புரிந்து வந்தார். 2 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத் தகராறில் அவர் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டதார். இதனால், மன உளைச்சலில் இருந்த ராஜேந்திரன், நேற்று முன் தினம், வீட்டில் யாரும் இல்லாத நேரம் விஷம் அருந்தினார். இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

error: Content is protected !!