News September 23, 2025
திருவள்ளூர் ரயில் பயணிகள் கவனத்திற்கு!

ஆயுத பூஜை மற்றும் தீபாவளியை முன்னிட்டு, சேலம் ரயில்வே கோட்டம் போத்தனூர் – சென்னை இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. போத்தனூர்-சென்னை: செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 24 வரை, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாலை 6.30 மணிக்கும். சென்னை-போத்தனூர்: செப்டம்பர் 25 முதல் அக்டோபர் 23 வரை, ஒவ்வொரு வியாழக்கிழமையும் இரவு 11.50 மணிக்கும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
Similar News
News September 23, 2025
திருவள்ளூர் அருகே பயங்கர தீ விபத்து

மீஞ்சூர்:புதிதாக அமைந்து வரும் எண்ணுார் சிறப்பு பொருளாதார மண்டல அனல் மின்நிலைய திட்ட பணிகளுக்காக, மின்மாற்றியில் ஆயில் நிரப்பும் போது தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மின்மாற்றி, டேங்கர் லாரி மற்றும் மின் தளவாடங்கள் ஆகியவை தீயில் எரிந்து நாசமாகின. இந்த விபத்து குறித்து இதுகுறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News September 23, 2025
திருவள்ளூர்: புதிய வாகனம் வாங்க ரூ.50,000 மானியம்!

இந்திய அரசு கடந்த ஆண்டு பிரதம மந்திரி இ-டிரைவ் (PM E-DRIVE) என்ற புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், பொதுமக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை எளிதாக வாங்க முடியும். இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10,000 வரையும், 3சக்கர வாகனங்களுக்குரூ.25,000-ரூ.50,000 வரையும் மானியம் வழங்கப்படுகிறது. புதிய வாகனம் வாங்க ஆசைப்படுபவர்கள் <
News September 23, 2025
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மு.பிரதாப் தலைமையில்
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் செப்டம்பர் 22 ஆம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதாப் பொதுமக்கள் (ம) மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.