News April 20, 2024
திருவள்ளூர்: மின் உற்பத்தி பாதிப்பு

மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு வடசென்னை அனல்மின் நிலையத்தின் இரு நிலைகளில் முதல் நிலையின் 3 அலகுகளில் தலா 210 விதம் 630 மெகாவாட் மின் உற்பத்தியும் இரண்டாவது நிலையில் உள்ள இரு அலகுகளில் தலா 600 விதம் 1200 என மொத்தம் நாளொன்றுக்கு 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில் அனல் மின் நிலைய 2வது நிலையின் 2வது அலகில் கொதிகலன் கசிவு காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
Similar News
News July 5, 2025
திருவள்ளூரில் அதிகரிக்கும் மோட்டார் சைக்கிள் உயிரிழப்புகள்

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில், செஞ்சியகரம் கிராமத்தைச் சேர்ந்த மாணிகண்டன் (28) நேற்று (ஜூலை 4) தனது உறவினர் சந்தோஷ் (17) உடன் மோட்டார் சைக்கிளில் சென்று வந்து கொண்டிருந்தார். அப்போது, சர்ச் எதிரே அடையாளம் தெரியாத வாகனம் மோதி, மாணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சந்தோஷ் படுகாயம் அடைந்து சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
News July 5, 2025
திருவள்ளூர் உழவர் சந்தையின் விலை நிலவரம்

திருவள்ளூர் உழவர் சந்தையின் இன்று (ஜூலை 05) காய்கறி விலை நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, (1 கிலோ) தக்காளி ரூ.35, உருளை ரூ.40, பீர்க்கங்காய் ரூ.45, புடலங்காய் ரூ.50, அவரைக்காய் ரூ.60, பச்சை மிளகாய் ரூ.40, வெண்டைக்காய் ரூ.60, சுரைக்காய் ரூ.45, பெரிய வெங்காயம் ரூ.30, பாகற்காய் ரூ.60, கத்திரிக்காய் ரூ.50, முருங்கைக்காய் ரூ.70, வாழைப்பழம் ரூ.45, தேங்காய் ரூ.60க்கு விற்பனை செய்யப்பட்டது
News July 5, 2025
திருவள்ளூரில் வீட்டு, நில பத்திரத்தில் பிரச்னையா ?

நிலம்/வீட்டின் பத்திரம் தொலைந்து விட்டால் கவலையே வேண்டாம். தாலுகா அலுவலகம் செல்லாமலே வீட்டில் இருந்தபடியே இந்த <