News March 21, 2025
திருவள்ளூர் மாவட்ட விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், திருவள்ளூர் மாவட்டத்தில் பிரதம மந்திரி கவுரவ நிதி திட்டத்தில் 41973 விவசாயிகள் பயன் பெற்று வருகின்றனர். இவர்களில் 16250 பேர் மட்டுமே தனித்துவ அடையாள அட்டை பெற்றுள்ளனர். மீதமுள்ள 25,723 விவசாயிகள் மார்ச் 31க்குள் தனித்துவ அடையாள அட்டை பெற்றால் மட்டுமே ஏப்ரல் மாதம் கவுரவ உதவித்தொகை வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
Similar News
News March 21, 2025
திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரங்கள் வெளியீடு

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
News March 21, 2025
ஆதிதிராவிடர் பழங்குடியின இளைஞர்களுக்கு புத்தாக்க பொறியாளர் பயிற்சி

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழக (தாட்கோ) நிறுவனமானது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு இளநிலை பொறியியல் பட்டயப்படிப்பு முடித்த இளைஞர்களுக்கு புத்தாக்க பொறியாளர் பயிற்சி வழங்கப்படவுள்ளது. இப்பயிற்சியினை பெற தகுதியுள்ளவர்கள் www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News March 21, 2025
பாஜக பிரமுகர் தாக்கப்பட்டதை கண்டித்து காவல் நிலையம் முற்றுகை

பாஜகவை சேர்ந்த திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செய்தி தொடர்பாளர் சிவ கோகுல கிருஷ்ணனை நேற்று அடையாளம் தெரியாத ஐந்து பேர் சேர்ந்த கும்பல் சரமாரியாக தாக்கி உள்ளனர். இதனால் படுகாயமடைந்த அவர் பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் பாஜக வை சேர்ந்த பலர் மீஞ்சூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் அங்கு பதற்றம் நிலவியது.