News September 4, 2025
திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை மாநில விருது பெரும் ஆசிரியர்கள்

நாளை ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மாநில டாக்டர். இராதாகிருஷ்ணன் விருது பெறும் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது திருவள்ளூர் டிஆர்பிசிசி பள்ளி ஆசிரியை வரலட்சுமி கடம்பத்தூர் ஓவிய ஆசிரியர் அருணன், புழல் லலிதா பூந்தமல்லி புஷ்பலதா, திருவாலங்காடு முதுகலை ஆசிரியர் ஏழுமலை, கும்மிடிப்பூண்டி சண்முகம் உட்பட 13 ஆசிரியர்கள் திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து விருது பெற உள்ளார்கள்
Similar News
News September 5, 2025
திருவள்ளூர்: கடைக்கு போறதுக்கு முன் இத பாருங்க

கடைகளில் கூடுதல் விலைக்கு (ம) காலாவதியான பொருட்களை விற்கும் போது மாவட்ட நுகர்வோர் மன்றத்தில் புகார் செய்யலாம். இதில் வக்கீல் இன்றி நாமே புகார் செய்து உரிய நஷ்டஈடு பெற முடியும். confo-th-tn@nic.in, thiruvallur.dcdrf@gmail.com என்ற இ-மெயிலில் (அ) மாவட்ட நுகர்வோர் மன்றம் 1-டி,சி.வி நாய்டு சாலை, 1-வது தெரு, திருவள்ளூர் (044-27664823) தொடர்பு கொண்டு புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க. <<17618027>>தொடர்ச்சி<<>>
News September 5, 2025
நுகர்வோர் மன்றத்தில் புகார் செய்வது எப்படி ?

கடைகள் மட்டுமல்லாது பணம் கொடுத்து பெறப்படும் அனைத்து சேவைகளும் இதில் அடங்கும். எடைகுறைவு, மோசமான சேவை, ஏமாற்றுதல், போலி நிறுவனங்கள் போன்ற சூழ்நிலைகளில் புகார் செய்யலாம். மாவட்ட நுகர்வோர் மன்றங்களில் புகார் செய்யும் போது ரசீது, வீடியோ, புகைப்படங்கள் போன்ற ஆதாரங்களை கையில் வைத்திருக்க வேண்டும். அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல் ஷேர் பண்ணுங்க
News September 5, 2025
திருவள்ளூர்: நாதஸ்வர கலைஞராக வாய்ப்பு

திருத்தணி முருகன் கோயிலில் நாதஸ்வர பயிற்சி பள்ளி இயங்கி வருகிறது. இந்த பயிற்சி பள்ளியில் 2025& 26 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது விருப்பமுள்ளவர்கள் www.tiruttanimurugan.hrce.gov.in வலைதளத்தில் சென்று விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.