News April 3, 2025

திருவள்ளூர் மாவட்டத்தில் வேலை வாய்ப்பு

image

திருவள்ளூர் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் Medical Officer, Special Educator, Psychologist ஆகிய பதவிகளுக்கு 7 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு ரூ.23,000 முதல் ரூ.60,000 வரை சம்பளம் வழங்கப்படும். B.Ed, B.Sc, BA, M.Ed, M.Sc, MA, MBBS படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், தகவலுக்கு <>இங்கு கிளிக்<<>> செய்யவும். *இந்த நல்ல வாய்ப்பை தவற விடாதீர்கள். உங்கள் நண்பர்களுக்கும் பகீர்ந்து தெரியப்படுத்துங்கள்*

Similar News

News April 4, 2025

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொழில் பழகுனர் பயிற்சி முகாம்

image

திருவள்ளூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 15.04.2025 அன்று மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டி மையம் சார்பில் பிரதமர் அப்ரண்டீஸ் பயிற்சி மேளா நடைபெற உள்ளது. இதில் மத்திய மாநில தனியார் நிறுவனங்கள், தொழில் நிறுவன கூட்டமைப்புகள் கலந்து கொள்கின்றன. இதில் கலந்துகொண்டு மத்திய அரசின் நாக் சான்றிதழ் பெற்று பயனடையலாம் 9499055663,8778452515,9444139373 எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

News April 4, 2025

தட்டுப்பாடு இல்லாமல் குடிநீர் வழங்க அறிவுறுத்தல்

image

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் குடிநீர் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரதாப் தலைமையில் நடைபெற்றது. ஆரணி, திருமழிசை பேரூராட்சிகளில் அம்ருத் 2.0 திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அப்பணியை விரைந்து முடித்து பொதுமக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீர் வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார்.

News April 4, 2025

1,299 SI பணியிடங்கள்: 7ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

image

தமிழ்நாட்டில் உள்ள 1,299 எஸ்.ஐ. பணியிடங்களுக்கான தேர்வுக்கு வரும் 7ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாலுகாவில் 933 காலிப் பணியிடங்களும். ஆயுதப்படையில் 366 காலிப் பணியிடங்களும் உள்ளன. ஏதாவது ஒரு இளங்கலை பட்டம் பெற்றவர்கள் வரும் மே 3ஆம் தேதி வரை இந்த <>லிங்கை க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். வாரிசுதாரர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு 10% ஒதுக்கீடு உள்ளது. ஷேர் செய்யுங்கள்

error: Content is protected !!