News August 14, 2024
திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை மின்தடை அறிவிப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை (ஆக.14) மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால், ஆவடி, திருமுல்லைவாயல், பாரதி நகர், வேணுகோபால் நகர், வ.உ.சி நகர், கணேஷ் நகர், நேதாஜி நகர், சோழம்பேடு, வைஷ்ணவி நகர், சோழவரம், சோத்துபெரும்பேடு, அல்லிமேடு, மேட்டுசுரம்பேடு, மேட்டு காலனி, ஒரக்காடு, கம்மவார்பாளையம், குமரன் நகர், நல்லூர் அதை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.
Similar News
News November 2, 2025
திருவள்ளூரில் பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

திருவள்ளூர் மக்களே, ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை இந்த லிங்கில் மேற்கொள்ளலாம். மேலும் இந்த <
News November 2, 2025
திருவள்ளூர்: பெற்றோரை இழந்த சோகத்தில் பெண் தற்கொலை!

திருவள்ளூர் அருகே நயப்பாக்கம் சேர்ந்த அருண்குமார் (23) இவரின் தாய் தந்தை இருவரும் இவரின் சிறுவயதிலேயே உயிரிழந்தானர். இதனால் அருண்குமாரும் தங்கை பாரதியும் பாட்டியின் வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் பெற்றோர் இல்லாத ஏக்கத்தில் இருந்து வந்த பாரதி 40 தூக்க மாத்திரைகளை உட்கொண்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News November 2, 2025
திருவள்ளூர்: கோயில் குளத்தில் மூழ்கிய சிறுவர்கள் பலி

திருவேற்காடு, அயனம்பாக்கம், பொன்னியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் தமீம் அன்சாரி. பெயிண்டராக உள்ளார். இவருக்கு ரியாஸ் (5), ரிஸ்வான் (3) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் நேற்று சிறுவர்களின் பெற்றோர்கள் வேலைக்கு சென்ற நிலையில், சிறுவர்கள் இருவரும் வீட்டின் அருகே உள்ள குளத்தில் விளையாட சென்றுள்ளனர். அப்போது நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


