News May 28, 2024
திருவள்ளூர் மாவட்டத்தில் புகையிலை விற்றால் 1 லட்சம் அபராதம்

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் இன்று வெளியிட்ட அறிக்கை: மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் முதல் முறை ரூ.25,000 அபராதம், 15 நாள் கடைகள் மூட வேண்டும். இரண்டாவது முறை ரூ.50,000 அபராதம், 30 நாள் கடை மூட வேண்டும். மூன்றாவது முறை விற்பனை செய்தால் 90 நாள் கடை மூடுவதுடன் 1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என கலெக்டர் பிரபு சங்கர் தெரிவித்தார்.
Similar News
News July 7, 2025
திருவள்ளூர் உழவர் சந்தையின் விலை நிலவரம்

திருவள்ளூர் உழவர் சந்தையின் இன்று (ஜூலை 07) காய்கறி விலை நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, (1 கிலோ) தக்காளி ரூ.35, உருளை ரூ.30, பீர்க்கங்காய் ரூ.45, புடலங்காய் ரூ.45, அவரைக்காய் ரூ.50, பச்சை மிளகாய் ரூ.50, வெண்டைக்காய் ரூ.50, சுரைக்காய் ரூ.40, பெரிய வெங்காயம் ரூ.30, பாகற்காய் ரூ.55, கத்திரிக்காய் ரூ.40, முருங்கைக்காய் ரூ.50, வாழைப்பழம் ரூ.45, தேங்காய் ரூ.60க்கு விற்பனை செய்யப்பட்டது
News July 7, 2025
திருவள்ளூரில் திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சி – ஆட்சியர் அறிவிப்பு

திருவள்ளூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வாயிலாக மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து, தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் வாரம் தொடர்பான நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. மாவட்ட தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூலை9ம் தேதி நடைபெறும் மாற்றுத்திறனாளிகளுக்கான தொழில்நெறி வழிகாட்டும், திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சியில், மக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News July 7, 2025
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலன்துறை உள்ளிட்ட 10 துறைகள் தொடர்பான திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகைகள், செயல்படுத்தப்பட்டத் திட்டங்கள் மற்றும் தற்போதைய நிலை குறித்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் 2024-2026-ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டுக் குழுவின் தலைவர் காந்திராஜன் தலைமையில், திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை (ஜூலை 7) முற்பகல் கள ஆய்வு மேற்கொள்ள உள்ளார் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்