News August 9, 2024
திருவள்ளூர் மாவட்டத்தில் ஏரிகளின் நீர்மட்ட விபரம்

சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல் ஏரியில் 2,490 மில்லியன் கன அடி தண்ணீரும், சோழவரம் ஏரியில் 98 மில்லியன் கன அடி தண்ணீரும் செம்பரம்பாக்கம் ஏரியில்1,491 மில்லியன் கன அடி தண்ணீரும், பூண்டி ஏரியில் 86 மில்லியன் கன அடி தண்ணீரும், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் 307 மில்லியன் கன அடி தண்ணீரும் இருப்பில் உள்ளது என இன்று (ஆக.9) காலை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Similar News
News September 7, 2025
திருவள்ளுர்: இந்த APP உங்க போன்ல இருக்கா?

மக்களின் பாதுகாப்பிற்காக காவலன் SOS செயலி உள்ளது. இந்த APPஐ பத்திரவிறக்கம் செய்து அவசர காலத்தில் மொபைலை அதிர செய்தால் நம் லொகேஷன் போலீஸ் கண்ட்ரோல் ரூமிற்கும், APPல் EMERGENCY CONTACTல் பதிவு செய்த உறவினர்கள், நண்பர்களுக்கு சென்று விடும். அடுத்த சிலமணி நேரத்தில் போலீசார் லொகேஷனை டிராக் செய்து வந்து விடுவார்கள். இங்கு <
News September 7, 2025
திருவள்ளுர்: இந்த APP உங்க போன்ல இருக்கா?

மேலும் மொபைல் டேட்டாவை ஆன் செய்து இந்த காவலன் SOS செயலியில் உள்ள SOSஐ கிளிக் செய்தால், மொபைலின் கேமரா தானாக திறந்து உங்களின் இருப்பிடத்தை புகைப்படம்/ வீடியோ எடுத்து கண்ட்ரோல் ரூமிற்கு அனுப்பும். மேலும் விபரங்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவகத்தை தொடர்பு கொள்ளலாம் (044-27666555). ஷேர் பண்ணுங்க
News September 7, 2025
டிப்பர் லாரி மோதி சிறுமி பலி

பூந்தமல்லி போரூரை கணேஷ் என்பவரின் மகள் யோகஸ்ரீ (வயது 10) தனது உறவுக்கார பெண்ணுடன் இருசக்கர வாகனத்தில் போரூர் அருகே சென்றபோது இருசக்கர வாகனத்தின் பின்னால் வந்த டிப்பர் லாரி மோதி சாலையில் தடுமாறி விழுந்தனர். இதில் யோகஸ்ரீ சம்பவ இடத்திலேயே பலியானார். உடன் சென்ற மற்றொரு சிறுமி மற்றும் உறவுக்கார பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.