News August 6, 2024
திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக, திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில், மாவட்டத்தில் பல பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகிறது. குறிப்பாக பூந்தமல்லி, ஆவடி, அம்பத்தூர், முகப்பேர், திருவேற்காடு, மதுரவாயல், நெற்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
Similar News
News December 27, 2025
திருவள்ளூர்: மாட்டைக் காப்பாற்ற முயன்றவர் ஏரியில் மூழ்கி பலி!

கும்மிடிப்பூண்டி அருகே பெருவாயல் பகுதியைச் சேர்ந்தவர் முனுசாமி(45). இவர், அப்பகுதியில் உள்ள தனியார் குடிநீர் உற்பத்தி தொழிற்சாலையில் கடந்த 10 ஆண்டுகளாக தோட்ட வேலை செய்து வந்தார். இந்நிலையில், உற்பத்திச் சாலைக்கு சொந்தமான மாடு ஒன்று ஏரியில் சிக்கித் தவித்தது. அப்போது மாட்டைக் காப்பாற்ற சென்ற முனுசாமி நீரில் மூழ்கி பரிதாபமாக பலியானார். அவரது உடலை நேற்று(டிச.26) இரவு ஏரியில் இருந்து மீட்டனர்.
News December 27, 2025
திருவள்ளூர்: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் எண்கள்

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று (டிச.26) இரவு 10 மணி முதல் இன்று காலை (டிச.27) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.